ETV Bharat / city

சமூக புறக்கணிப்பால் வாக்களிக்கவில்லை - திருநங்கைகள் குமுறல்

மதுரை: சமூக புறக்கணிப்பின் காரணமாக தொடர்ந்து தாங்கள் அவமதிக்கப்பட்டு வருவதாகவும், தங்களுக்குரிய அங்கீகாரம் இல்லாததால் வாக்களிக்கவில்லை எனவும் திருநங்கைகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

transgenders
transgenders
author img

By

Published : Apr 6, 2021, 10:25 PM IST

மதுரையில் மட்டும் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும், இம்மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 204 பேர் மட்டுமே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். அதிலும், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்கள் 70 பேர் மட்டுமே வாக்குகளை பதிவு செய்தனர். எஞ்சிய நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடிக்கே வரவில்லை.

இதுகுறித்து நாம் திருநங்கைகளிடம் கேட்டபோது, ”மதுரை மாவட்டத்தில் இருக்கும் திருநங்கைகளில் பலர் தங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று பதிவு செய்து கொள்ள முன்வருவதில்லை. இதற்கு சமுதாயத்தின் பார்வையும் ஒரு காரணம். அதுமட்டுமல்லாது மருத்துவர்களிடம் சென்று சான்றிதழ் பெறும்போது, பெண்கள் என்றே எங்களை குறிப்பிடுகின்றனர்.

சமூக புறக்கணிப்பால் வாக்களிக்கவில்லை - திருநங்கைகள் குமுறல்

யாரும் எங்களை மூன்றாம் பாலினத்தவராக மதிப்பதில்லை. இதற்கு முன்னர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது திருநங்கைகள் என்று எங்களுக்கு பெயரையும் சூட்டி சமுதாயத்தில் எங்களுடைய பங்களிப்பு குறித்து பெருமைப்படுத்தும் வகையில் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கினார். அதற்குப் பின்னர் நாங்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம். அதனாலேயே இம்முறை எங்களில் பலர் வாக்களிக்கவே விரும்பவில்லை. எனவே, அடுத்து வரக்கூடிய அரசாவது மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வு முன்னேற உதவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: ஜனநாயக கடமையாற்றிய மனநலம் பாதித்தோர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.