சிவகாசியில் கடந்தாண்டு நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெண் தொழிலாளிகள் கார்த்தீஸ்வரி, ஹமீதா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராமநாதன், அவரது மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இதுபோன்ற வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் எவ்வித கருணையும் காட்டது. அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பெரியகுளம் அரசு வழக்கறிஞர் நியமனம் ரத்து... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை...