ETV Bharat / city

மழைநீரை அறுவடை செய்யும் பொறியாளரின் சீரிய கட்டமைப்பு!

மதுரை: மழைநீரை சேமித்தன் மூலம் ஒரு குடும்பத்திற்கான தண்ணீர் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பதற்கு, ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை பொறியாளர் அருணாசலத்தின் கட்டமைப்பு அனைவருக்கும் ஒரு வழிகட்டுதலாக அமைந்துள்ளது.

மழைநீரை அறுவடை செய்யும் பொறியாளரின் சீரிய கட்டமைப்பு
author img

By

Published : Jul 5, 2019, 7:24 AM IST

மதுரையைச் சேர்ந்த முன்னாள் தலைமை பொறியாளர் அருணாச்சலம் என்பவர், 700 சதுர அடி கொண்ட தனது வீட்டில் மொட்டை மாடியில் மட்டும் சிறந்த மழைநீர் வடிகால் அமைப்பை உருவாக்கி, தனது வீட்டிற்குத் தேவையான குடிநீர்த் தேவையைச் சிறப்புடன் பூர்த்தி செய்து வருகிறார், வீட்டு மொட்டை மாடியில் பொழிகின்ற மழை நீரை, முறையான கட்டமைப்பின் வாயிலாக வடிகட்டி, தண்ணீர் தொட்டியில் சேமித்து, அதனைக் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்.

அது குறித்து அவர் கூறும்போது, ’மழைநீர் சேகரிப்பு என்ற விஷயத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்த வீட்டை நான் கட்டினேன், இந்த வீட்டின் மொட்டை மாடியில் விழுகின்ற, மழை நீர் அனைத்தும் சேமிக்கப்பட்டு வீட்டின் கீழே உள்ள மிகப் பெரிய தொட்டியில் தண்ணீர் அனைத்தும் கொண்டுசெல்லப்படுகின்றன அங்கிருந்து மோட்டார் மூலம் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் கொண்டு செல்லப்பட்டு அந்த தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறோம்.

மழைநீரை அறுவடை செய்யும் பொறியாளரின் சீரிய கட்டமைப்பு

மழைநீரில் நமக்குக் கிடைக்கக்கூடிய இயற்கையான நுண்ணூட்டங்கள், நம் உடலின் ஆதார சக்திக்குப் பெருந்துணை புரிகின்றன. ஆகையால் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகள் பலமடைகின்றன. இந்த தண்ணீர் மூலம் சமைக்கப்படும் உணவுகள் மிகச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறது. வானத்திலிருந்து பொழிகின்ற மழை நீரை, நாம் முறையாகச் சேமித்துப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோன்று பயன்படுத்தியது போக மீதம் உள்ள நீரையும் பூமித் தாய்க்குக் கொடுப்பது நம் கடமையாகும்’ என்றார்

Intro:வறட்சியின் கொடுமை தமிழகத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில் நீர்நிலைகளின் அருமை மழை நீரின் மகத்துவம் கொஞ்சம் கொஞ்சமாய் மக்களுக்கு இப்போதுதான் புரியத் துவங்கி இருக்கிறது மழைநீரை அறுவடை செய்வதன் மூலம் ஒரு குடும்பத்திற்கான தண்ணீர் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பதற்கு மதுரையைச் சேர்ந்த பொதுப்பணித்துறையில் முன்னாள் தலைமை பொறியாளர் அருணாசலத்தின் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முயற்சி பாராட்டுக்குரியது தான் அது குறித்து சிறப்பு செய்தி இது

Body:வரட்சியால் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு வரமாய் வந்த வைத்ததுதான் இந்த மழை நீர் சேகரிப்பு தமிழக அரசு இதற்கான தனியாக சட்டம் இயற்றி மழைநீர் சேகரிப்பு வலியுறுத்திய போதும் தனிநபர்கள் அதனை மேற்கொண்டு செய்ய வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தான் பொறியாளர் அருணாச்சலத்தின் இந்த முயற்சி

சற்றேறக்குறைய ஆயிரத்து 700 சதுரஅடி கொண்ட தனது வீட்டில் மொட்டை மாடியில் மட்டும் சிறந்த மழைநீர் வடிகால் அமைப்பை உருவாக்கி தனது வீட்டிற்கு தேவையான குடிநீர் தேவையை சிறப்புடன் பூர்த்தி செய்து வருகிறார் வீட்டு மொட்டை மாடியில் பொழிகின்ற மழை நீரை முறையான கட்டமைப்பின் வாயிலாக வடிகட்டி தண்ணீர் தொட்டியில் சேமித்து அதனை குடிப்பதற்கும் தொடங்குவதற்கும் பயன்படுத்தி வருகிறார்

அது குறித்து அவர் கூறும்போது மழைநீர் சேகரிப்பு என்ற விஷயத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த வீட்டை நான் கட்டினேன் இந்த வீட்டின் மொட்டை மாடியில் விழுகின்ற மழை நீர் அனைத்தும் சேமிக்கப்பட்டு வீட்டின் கீழே உள்ள மிகப் பெரிய தொட்டியில் தண்ணீர் அனைத்தும் கொண்டுசெல்லப்படுகின்றன அங்கிருந்து மோட்டார் மூலம் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் கொண்டு செல்லப்பட்டு அந்த தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம்

மொட்டை மாடியில் இருந்து பெறப்படுகின்ற தண்ணீரை அடுத்தாற்போல் போல் உள்ள தொட்டியில் மணல் ஜல்லி கரி பெருங்கற்கள் என்ற வரிசையில் வடிகட்டித்தான் கீழே உள்ள பெரிய தொட்டியில் தண்ணீரை கொண்டு செல்கிறோம் இந்த தண்ணீர் தொட்டியில் காற்றோ வெளிச்சமோ புகாத அளவிற்கு மிக இறுக்கமாக கட்டியுள்ளேன் குறைந்த அளவு மழை பெய்தாலும் கூட போதுமான அளவு தண்ணீர் இந்த தொட்டியில் நிரம்பிவிடும் பிறகு வருஷக்கணக்கில் அந்த தண்ணீரை ஒட்டுமொத்த குடும்பமே பயன்படுத்திக்கொள்ளலாம் ஒருவேளை பெருமழை பெய்தால் தொட்டிக்குள் நடத்துகின்ற தண்ணீர் போக மீதமுள்ள தண்ணீர் வெளியேறி பூமிக்குள் சென்றுவிடும் வகையில் இந்த மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது

மழைநீரில் நமக்கு கிடைக்கக்கூடிய இயற்கையான நுண்ணூட்டங்கள் நம் உடலின் ஆதார சக்திக்கு பெருந் துணை புரிகின்றன ஆகையால் சிறுநீரகம் இதயம் போன்ற உறுப்புகள் பலமடைகின்றன இந்த தண்ணீர் மூலம் சமைக்கப்படும் உணவுகள் மிக சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறது வானத்திலிருந்து பொழிகின்ற மழை நீரை நாம் முறையாக சேமித்து பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் அதேபோன்று பயன்படுத்தியது போக மீதம் உள்ள நீரையும் பூமித் தாய்க்கு கொடுப்பது நம் கடமையாகும் என்றார்

மதுரையிலிருந்து அழகர் கோவில் செல்லும் சாலையில் கடத்தினர் உங்களுக்கு அருகில் பொறியாளர் அருணாச்சலத்தின் வீடு அமைந்துள்ளது தனது வீட்டில் செய்யப்பட்டுள்ள மழை நீர் சேமிப்பின் மூலமாக பெறப்பட்ட தண்ணீரை நமக்கும் வழங்கினார் மிக சுவையாகவும் சுகாதாரமாகவும் அந்த தண்ணீர் இருந்தது தமிழகத்தில் தற்போதுள்ள சூழலுக்கு இந்த மழை நீர் கட்டமைப்பு வசதி அனைத்து வீடுகளும் செய்து கொண்டு விட்டாள் மிகப்பெரும் வறட்சியையும் எதிர் கொண்டு வாழ முடியும் என்பதற்கு இந்த வீடு நல்லதொரு சாட்சி

( இந்த வீட்டின் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து விளக்கும் வீடியோ பதிவு இதே ஸ்லக் நேமில் தனியாக இணைக்கப்பட்டுள்ளன அத்துடன் ஆங்கிலத்தில் திரு அருணாசலம் விளக்கம் நேர்காணலும் தனியே இணைக்கப்பட்டுள்ளன இதனை மற்ற மொழிகளுக்கும் பயன்படுத்தலாம்)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.