ETV Bharat / city

தெரு நாய்களுடன் கேக் வெட்டிய இளம்பெண்

தேசிய நாய் வளர்ப்பு தினத்தன்று தெரு நாய்களுடன் இளம்பெண் கேக் வெட்டி கொண்டாடினார்.

f
d
author img

By

Published : Sep 8, 2021, 6:21 AM IST

மதுரை: ஆண்டுதோறும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தேசிய நாய் வளர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது மனிதர்களுக்கு துணையாக மட்டுமன்றி பாதுகாப்பாகவும் இருந்து வரும் நாய்களை பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நாளாகும்.

இந்நாளை முன்னிட்டு மதுரை சூர்யா நகரைச் சேர்ந்த நட்சத்திரா என்ற இளம்பெண் தனது நண்பர்கள், குடும்பத்தினருடன் சேர்ந்து தெருநாய்களுக்கு கேக் வெட்டி கொண்டாடினார்.

வைரலாக பரவிய வீடியோ

இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளிலுள்ள 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவுகளை வழங்கினார். மேலும், நாய்களுக்கு ஒளிரும் பட்டைகளை (ரிப்ளக்ட் காலர்) கழுத்தில் அணிவித்தனர். நாய்களுக்கு வயிற்றிலுள்ள பூச்சி கோளாறுகளை நீக்கும் மாத்திரைகளையும் வழங்கினர்.

தெரு நாய்களுடன் கேக் வெட்டிய இளம்பெண்

நாய் வளர்ப்பு தினத்தன்று எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலானது. மேலும், இதனைக் கண்ட பலரும் அவர்களது செயல்களுக்கு பாராட்டு தெரிவித்து, ஊக்கமளித்தனர்.

இதையும் படிங்க: தெரு நாய்களுக்கு விஷ ஊசி... கொத்து கொத்தாக கிடைத்த 300 சடலங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.