மதுரை: மயிலாடுதுறையைச் சேர்ந்த சேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை நாகானந்தா சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதாகக்கூறி மயிலாடுதுறையைச் சேர்ந்த நித்தியா, ஜெயக்குமார், சங்கர், செல்லப்பா ஆகியோர் மக்களிடமிருந்து 8 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மயிலாடுதுறை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், மனுதாரரின் புகாரை பரிசீலனை செய்து அதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் அந்த புகார் குறித்து இந்து அறநிலையத்துறை செயலாளர் இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:மனநலம் பாதிக்கப்பட்டவர் மீதான கொலை வழக்கில் கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து