சிவகங்கை: மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி கிராமம். சிந்து சமவெளி நாகரீகம்தான் இந்தியாவில் தோன்றிய பழம்பெரும் நாகரீகம் என்பதை மாற்றி தமிழ்நாட்டின் வைகை கரை நாகரிகத்துக்குச் சான்றாய் அமைகிறது இந்த கீழடி.
2013ஆம் ஆண்டு வைகை ஆற்றுப்படுகை பகுதியில் நடந்த தொல்லியல் துறையின் ஆய்வு மூலம் தொல்லியல் எச்சங்கள் உள்ள 294 பகுதிகளை அடையாளம் கண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து எந்த இடத்திலும் பெரிதாக எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
6 ஆண்டுகளுக்கும் மேலாக அகழ்வாய்வு பணி
2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கீழடியில் நடத்தப்பட்ட ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணியில் அதிகமான சங்க கால உபயோக பொருட்கள் உள்பட பல பொருள்கள் கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து, ஏழாம் கட்ட அகழ்வாய்வு தொடர்ந்து நடந்தது. இத்துடன் முடிவடைய இருந்த அகழ்வாய்வு பணிகள் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் முக்கியத்துவத்தால் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது எட்டாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நடந்து வருகிறது.
செவ்வக வடிவ பகடைக்காய் கண்டெடுப்பு!
அகழ்வாய்வு பணிகள் நிறைவடையும் போது, கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தந்தத்தால் ஆன செவ்வக வடிவிலான பகடைக்காய் நேற்று (பிப். 17) கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கனசதுர வடிவில் மட்டும் கிடைத்துவந்த பகடைக்காய், தற்போது செவ்வக வடிவில் கிடைத்துள்ளது.
தங்கம் தென்னரசு ட்வீட்!
செவ்வக வடிவ பகடைக்காய் கிடைத்ததைத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-
மாண்புமிகுமுதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு. இதுகாறும் தமிழ் நாடு தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட ஆய்வுகளில் கனசதுர (Cubical)வடிவில் மட்டுமே பகடைக் காய்கள் கிடைத்தது pic.twitter.com/forz56NskS
— Thangam Thenarasu (@TThenarasu) February 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகுமுதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு. இதுகாறும் தமிழ் நாடு தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட ஆய்வுகளில் கனசதுர (Cubical)வடிவில் மட்டுமே பகடைக் காய்கள் கிடைத்தது pic.twitter.com/forz56NskS
— Thangam Thenarasu (@TThenarasu) February 17, 2022மாண்புமிகுமுதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு. இதுகாறும் தமிழ் நாடு தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட ஆய்வுகளில் கனசதுர (Cubical)வடிவில் மட்டுமே பகடைக் காய்கள் கிடைத்தது pic.twitter.com/forz56NskS
— Thangam Thenarasu (@TThenarasu) February 17, 2022
இதையும் படிங்க:கீழடி அகழாய்வு தளத்தில் தற்காலிக தொல்பொருள் கண்காட்சியகம்