மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா களைகட்டி உள்ளது. கடந்த செப்.26 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி விழா வருகின்ற அக்.5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாள்தோறும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்து வருகிறார்.
மூன்றாம் நாளான இன்று (செப்.28) அம்மன் பட்டாபிஷேக அலங்காரத்தில் சிறப்பாக காட்சியளித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. கொலு மண்டபத்தில் (உற்சவர்) அலங்காரத்தில் எழுத்தருளிய அம்மனை பக்தர்கள் திரளாக வந்து வணங்கி சென்றனர்.
மேலும் கொலு அலங்கார பொம்மைகள் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான பொம்மைகள் மற்றும் இதர பொம்மைகள் கொலுச்சாவடியில் கொலுவாக வைத்திருந்தனர். திரளான பக்தர்கள் அம்மனையும், சுவாமியை தரிசனம் செய்து கொலுவையும் பார்த்து ரசித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலய திருவிழா - சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் விஸ்வகர்மேஸ்வரர்