ETV Bharat / city

மகளுக்கு தாய் பெயரை இனிஷியலாக வைக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை அனுமதி

தனது பெயரின் முதல் எழுத்தை மகளின் இனிஷியலாக பயன்படுத்த அனுமதிக்கக் கோரி தாய் அளித்த மனுவுக்கு 30 நாள்களுக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
author img

By

Published : Oct 26, 2021, 10:41 PM IST

மதுரை: கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த போதும்பொண்ணு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் காவ்யா, கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கணவர் விட்டுச் சென்ற நிலையில் நானும் எனது மகளும் எனது தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறோம்.

நான் கூலி வேலை செய்து வரும் நிலையில், மிகவும் கடினப்பட்டு வாழ்க்கையை நகர்த்திவருகிறோம். இந்நிலையில் எனது மகளை பள்ளியில் சேர்த்தபோது எனது பெயரின் முதல் எழுத்தை அவரது இனிஷியலாக பதிவு செய்தோம்.

தகுதி தேர்வின் அடிப்படையில் அரசு உதவித் தொகை வழங்குவதை அறிந்த எனது மகள் அதற்கான தேர்வினை எழுத முயன்றபோது, அவரது தந்தையின் பெயரின் முதல் எழுத்தை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால், மனவுளைச்சலுக்கு ஆளான எனது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

வழக்கை முடித்துவைத்த நீதிபதி

எனது பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்தித் தேர்வு எழுத அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கோரியபோது, பள்ளி நிர்வாகம் அதை ஏற்க இயலாது எனக் கூறி விட்டதோடு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போதும் இதே பிரச்சினை எழக்கூடும். ஆகவே, எனது பெயரின் முதல் எழுத்தை எனது மகள் பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, “காவ்யாவின் சான்றிதழில்களில் தாய் பெயரின் முதல் எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநரும், அரசுத் தேர்வுத் துறையின் உதவி இயக்குநரும் மனுதாரரின் மனுவை, 2003ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் பரிசீலித்து 30 நாள்களுக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: மன்சூர் அலிகான் வீட்டுக்கு வைத்த சீலை அகற்றக் கோரி மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.