ETV Bharat / city

கூட்டணி தலைமையின் முடிவே எங்களின் முடிவு - சரணடைந்த துரை வைகோ - மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மதுரையில் பேட்டி

பிரதமருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது குறித்து கூட்டணி தலைமையின் முடிவே எங்களின் முடிவு எனவும், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும்போது எல்லோருக்கும் பொதுவாக ஒதுக்க வேண்டும் எனவும் மதிமுக தலைமை நிலையச் செயலர் துரை வைகோ மதுரையில் பேட்டியளித்துள்ளார்.

கூட்டணி தலைமையின் முடிவே எங்களின் முடிவு
துரை வைகோ பேட்டி
author img

By

Published : Jan 3, 2022, 9:42 PM IST

மதுரை: வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்தநாளையொட்டி, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மதிமுக தலைமை நிலையச் செயலர் துரை வைகோ மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து சிலை முன்பாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது,

'இந்த மண்ணுக்கு எல்லா நிறமும் தேவை. எல்லா மக்களும், எல்லா சமுதாயமும் தேவை. இவர் தான் தேவை, இது தேவையில்லை என்ற கருத்துக் கூடவே கூடாது' என்றார்.

எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு,

'அதைத் தீர்மானிப்பது மக்கள் சக்தி தான். மக்களுக்கு நம்பிக்கையாக நடந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.

ஒமைக்ரானால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அறிவித்தால் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்றார்.

தமிழ்நாடு வரும் பிரதமருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, கூட்டணி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அது தான் எங்கள் முடிவு என்றார், துரை வைகோ.

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசு

மேலும் அவர், 'பாஜக ஆளும் 6 மாநிலங்களுக்கு மூவாயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். ஆனால் பேரழிவு நடந்துள்ள தமிழ்நாட்டிற்கு முதல் ரூ.6000 கோடி கேட்டுள்ளனர்.

ஆனால், அது குறித்து தற்போது வரை முறையான பதில் எதுவுமே ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை.

பாஜக ஆளும் ஆறு மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளனர். நிதி ஒதுக்கும் போது எல்லோருக்கும் பொதுவாக ஒதுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில், சொந்தக் கட்சி ஆளும் மாநிலம் என்று பார்த்து ஒதுக்கக்கூடாது.

துரை வைகோ பேட்டி

இந்தியப் பிரதமராகத் தமிழ்நாட்டிற்கு அவரை வரவேற்கிறோம்.

தமிழ்நாட்டிற்கு நிவாரணம் எப்போதோ கொடுத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசிடம் முறையான பதில் இல்லை. அதையெல்லாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஒன்றிய அரசு தனது மாற்றாந்தாய் மனப்பான்மையை மாற்ற வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க:தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.