மதுரை மாவட்டம், திருமங்கலம் சவுக்கத்அலி தெருவைச் சேர்ந்தவர் அப்சல்கான் (32). இவர் தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அப்சல்கானை கைதுசெய்தார்.
இதையும் படிங்க: 'கூலித்தொழிலாளி தூக்கிட்ட நிலையில் கண்டெடுப்பு: உறவினர்கள் போராட்டம்'