ETV Bharat / city

75 ஆவது சுதந்திர நாளில் 45 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் வைகை எக்ஸ்பிரஸ்..

author img

By

Published : Aug 14, 2022, 10:07 PM IST

75 ஆவது சுதந்திர நாளில் 45 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் வைகை எக்ஸ்பிரஸ் குறித்து சிறப்பு பார்வை..

Etv Bharat
Etv Bharat

இந்திய விடுதலைப் போராட்டத்தின் 75ஆவது ஆண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக தென் மாவட்டங்களின் ரயில் போக்குவரத்துக்கு திறவுகோலாகத் திகழும் வைகை எக்ஸ்பிரஸ் தனது 45ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

இந்தியாவின் ரத்தநாளமாகவும், தேசத்தை இடைவெளியின்றி இணைக்கின்ற பாலமாகவும் திகழ்கின்ற ரயில் போக்குவரத்து, உலகம் வியக்கும் உன்னத சாதனையாகும். இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரால் ரயில் போக்குவரத்திற்கு அடிக்கோலிடப்பட்டாலும், விடுதலைக்குப் பிறகான சுதந்திர இந்தியாவில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

மதுரை 'வைகை எக்ஸ்பிரஸ்'
மதுரை 'வைகை எக்ஸ்பிரஸ்'

தமிழக தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு சிறந்த ஊக்குவிப்பாக அமைந்தது "வைகை எக்ஸ்பிரஸ் ரயில்" என்றால் அது மிகைச்சொல் அல்ல. இந்த ரயில் கடந்த 1977ஆம் ஆண்டு ஆக.15ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை - மதுரைக்குச் செல்லும் பகல் நேர விரைவு ரயிலாக அறிமுகமானதன் மூலமாக தென் மாவட்ட வணிகர்கள் பெரிதும் பயனடைந்தனர்.

வைகை எக்ஸ்பிரஸ்
வைகை எக்ஸ்பிரஸ்

இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே, மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது. 'ஆசியாவிலேயே மீட்டர் கேஜ்ல் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில்' என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு உண்டு.

தொடக்கத்தில் இந்த ரயிலை இயக்குவதற்கான லோகோ பைலட்டுகள் இருவருக்கு ராஜஸ்தான்-தில்லி செல்லுமூ பிங்க் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் அப்போது இயக்கப்பட்டது. வேம்படையான் மற்றும் மாணிக்கம் செல்லையா ஆகிய இருவர்தான் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் ஓட்டுநர்களாக பணியாற்றினர். அதற்குப் பிறகு ஆறு ஓட்டுநர்களைக் கொண்ட குழு, ஷிஃப்டு முறையில் பணியாற்றினர்.

வைகை எக்ஸ்பிரஸின் மூத்த ரயில்வே ஊழியர்கள்

வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் பயண அட்டவணையில் செவ்வாய்க்கிழமை மட்டும் இடம்பெறவில்லை. கடந்த 1980ஆம் ஆண்டிற்குப் பிறகே பயண அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 1984ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக ரயில் பெட்டிகளில் குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள் இணைக்கப்பட்ட பெருமை வைகை எக்ஸ்பிரஸ்க்கே உண்டு.

அதிக இழுவைத் திறன் கொண்ட என்ஜின் இணைக்கப்பட்டதும் இந்த ரயிலில்தான். அதே போன்று ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நவீன வசதிகளும் முதன்முதலாக இந்த ரயிலில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அதேபோன்று நாள்தோறும் பயணிகளால் நிரம்பி வழியும் இந்தியாவின் ஒரு சில ரயில்களில் வைகை எக்ஸ்பிரஸ்க்கும் முக்கிய இடமுண்டு.

மூவர்ணக் கொடியின் நிறத்தில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்

நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று மறு மார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும். ஆனால், கடந்த மார்ச் 3-ஆம் தேதி மதுரையிலிருந்து காலை 7 மணி 05 நிமிடங்களுக்குப் புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயந்திரக் கோளாறு காரணமாக 7.26-க்குப் புறப்பட்டுச் சென்றது.

’வைகை எக்ஸ்பிரஸ்’-ன் 45ஆவது தொடக்க நாள் கொண்டாட்டம்

ஆனாலும் சென்னையை சென்றடைய வேண்டிய வழக்கமான நேரம் 2.30 மணிக்கு முன்னதாக 2.07 மணிக்கு சென்றடைந்து சாதனை படைத்தது. மதுரை-சென்னை இடையேயான மொத்த தூரம் 497 கி.மீ-ஐ 6 மணி 40 நிமிடங்களில் கடந்தது இந்திய ரயில்வேயின் குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரைச் சேர்ந்த ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் கூறுகையில், 'வடமாநிலங்களில் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு சராசரியாக 130 கி.மீ. வேகம் நிர்ணயம் செய்யப்பட்டு, இயக்கப்படுகின்றன. அவற்றில் சில நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட முன்னதாக சென்றிருக்கின்றன.

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 7 மணி நேரமும் சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 497 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரமும் கடக்கின்றன. ஆனால், வைகை எக்பிரஸை விட இந்த ரயில்களில் நிறுத்தங்கள் மிகக் குறைவாகும். தமிழ்நாட்டில் இயக்கப்படும் ரயில்களோடு ஒப்பிடும்போது, வைகை எக்ஸ்பிரஸ் சாதனைக்குரிய தொடர்வண்டியாக தன் பெருமையை இன்றும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது' என்கிறார்.

45வது ஆண்டு நிறைவு பெற்ற வைகை எக்ஸ்பிரஸ் குறித்த சிறப்பு தொகுப்பு

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில், வைகையைப் போன்றே வேகமாக பயணிக்கும் அதிவேக விரைவு வண்டியாகும். ஆனால், இந்த ரயிலுக்கு வழியில் எங்கும் நிறுத்தங்கள் கிடையாது. ஆனால், மாறாக வைகை எக்ஸ்பிரஸ் 11 நிலையங்களில் நின்று செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையும் வைகை எக்ஸ்பிரஸ்சில் அதிகம். வெறும் ரூ.130 கட்டணத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு செல்வது என்பது, ரயில்வேயின் மகத்தான பயணிகள் சேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதையும் படிங்க: மதுரை - சென்னை: அதிவேக பயணம்... சாதனை படைத்த வைகை எக்ஸ்பிரஸ்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.