ETV Bharat / city

மதுரையில் தம்பதி மீது மோதிய கார்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்... - madurai-road-accident cctv

மதுரையில் சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் பதைபதைக்கும்படி உள்ளது.

madurai-road-accident-one-killed
madurai-road-accident-one-killed
author img

By

Published : Mar 14, 2022, 10:31 AM IST

Updated : Mar 14, 2022, 6:12 PM IST

மதுரை மாவட்டம், சோழவந்தானிலிருந்து தம்பதி இருவர் 12 வயது சிறுமி உடன் வாடிப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தனர். மாலை 5 மணியளவில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனர்.

அப்போது மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதனைக் காணாமல், இடதுபுறத்தில் திரும்ப முயற்சித்த இருசக்கரவாகனம் காரில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் இருந்த பழனியம்மாள் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

அவருடைய கணவர் மற்றும் உடன் அழைத்துவரப்பட்ட 12 வயது சிறுமி படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து சோழவந்தான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் உடன் அழைத்துவரப்பட்ட சிறுமி, பழனியம்மாளின் பேத்தி எனத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் இருசக்கர வாகனத்திலிருந்து மூவரும் தூக்கிவீசப்படும் காட்சி பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் கோர விபத்து - நான்கு பேர் மரணம், ஆறு பேர் படுகாயம்

Last Updated : Mar 14, 2022, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.