மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருவிழாக்களுக்குப் பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் கடந்த நவ.4ஆம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கோலாட்ட உற்சவ நாட்களில் நாள் தோறும் மாலை வேளைகளில் அம்மன் ஆடி வீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து கோலாட்ட திருவிழாவின் நிறைவு நாளான நேற்று சுவாமி சன்னதி கொடிமரத்தின் அருகில் சுவாமியுடன் பிரியாவிடை அம்மனும், மீனாட்சி அம்மனும் தனித் தனியாக வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.
இதனைத் தொடர்ந்து சிறப்புத் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் நான்கு ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெருமழையையும் பொருட்படுத்தாமல் திருவிழாவின் நிறைவு நாளை காணப் பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க : உருண்டு புரண்டு பைக் ரைடருடன் காவலர் சண்டை செய்யும் காட்சி வைரல்!