ETV Bharat / city

கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கில் மனுதாரரின் கோரிக்கை குறித்து வருவாய்த் துறை செயலாளர் சட்டத்துக்கு உட்பட்டு உரிய முடிவு எடுக்கலாம் என கூறி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை வழக்கை முடித்து வைத்தது.

கருணாநிதி சிலை
கருணாநிதி சிலை
author img

By

Published : Oct 1, 2021, 6:55 AM IST

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி, ஐந்து முறை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தார். உலகிற்கு முன்னுதாரணமாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினார். தொடர்ந்து 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

உலகத் தமிழர்களின் நலனுக்காக பணியாற்றியவர். அவரது நினைவையும், சமூகப் பணியையும் போற்றிடும் வகையில் புதுக்கோட்டை நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் கருணாநிதிக்கு சிலை வைக்க இளைஞரணி சார்பில் முடிவு செய்துள்ளோம்.

சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கு விசாரணை

இதற்காக புதுக்கோட்டை நகர் பகுதியில் ஒரு உரிய இடத்தைத் தேர்வு செய்து அனுமதிக்குமாறு புதுக்கோட்டை ஆட்சியர், நகராட்சி கமிஷனர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு அளித்தோம். அந்த மனுவை வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால், இதுவரை அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு எனது மனுவை பரிசீலித்து கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நேற்று (செப்.30) நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை முடித்துவைத்த நீதிபதி

அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "கருணாநிதி தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பங்குகள் அதிகம், ஐந்து முறை முதலமைச்சராக இருந்துள்ளார். எனவே அவரது சிலையை வைக்க அனுமதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, மனுதாரரின் மனுவினை தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை செயலாளர் சட்டத்துக்கு உட்பட்டு உரிய பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கூறிய நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: சொத்துகுவிப்பு வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத எம்.ஆர். விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.