மதுரை: உயர்நீதிமன்ற மதுரைகிளையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நபர் தாக்கல் செய்த மனுவின் படி, நிறைவேற்றப்பட்ட உத்தரவுகள் குறித்த அறிக்கையை தென் மண்ட காவல்துறை தலைவர் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த மனு இன்று (ஆக.30) நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “ஒப்புகை சீட்டு வழங்க உத்தரவிட்டதன் பின்பு கடந்த 2 மாதத்தில் 2011 முதல் 2021 வரை 65,000 வழக்குகளில் 25,000 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புகை சீட்டு பெறப்பட்டுள்ளது. மேலும், 38,000 வழக்குகளில் தடவியல் துறை அறிக்கை, பிறதுறைகளில் இருந்து அறிக்கை பெறப்பட வேண்டியிருப்பதால் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, தென் மண்டல காவல்துறை தலைவர், துணை காவல்துறை தலைவர் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் நிறைவேற்றப்பட்ட உத்தரவுகள் குறித்த அறிக்கையை தென் மண்ட காவல்துறை தலைவர் சமர்ப்பிக்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு