ETV Bharat / city

கொடைக்கானல் வனப்பகுதியில் சாலை திட்டம்: மாநில தலைமை வனப்பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

madurai-hc-
madurai-hc-
author img

By

Published : Mar 30, 2022, 7:43 AM IST

Updated : Mar 30, 2022, 8:29 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு போட்டிருந்தார். அவரது மனுவில், "கொடைக்கானல் வன விலங்கு சரணாலயம் 608.95 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனிடையே கொடைக்கானல், வட்டக்கானல் வருவாய்த்துறை அலுவலர்கள், டால்பின் நோஸ் சுற்றுலாத்தலத்தை அடைய வனப்பகுதி வழியாக சாலை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

இப்பகுதியில் சாலை அமைத்தால் இயற்கை சமநிலையை பாதிப்பட்டையும். ஆகவே டால்பின் நோஸ் சுற்றுலாதலத்திற்கு வட்டக்கானலிலிருந்து வனப்பகுதி வழியாக சாலை அமைக்கும் திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், அமர்வில் நேற்று(மார்ச் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழ்நாடு வனத்துறை செயலர் சுப்ரியா சாகு, தலைமை வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: பள்ளிவாசல் மயான வேலைகளை செய்ய எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Mar 30, 2022, 8:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.