ETV Bharat / city

பட்டா கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து அறிக்கை தாக்கல் :நில அளவை ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு - நில அளவை ஆணையம்

உட்பிரிவு செய்தும், உட்பிரிவு செய்யப்படாமலும் பட்டா கேட்டு அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நில அளவை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை
சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை
author img

By

Published : Sep 8, 2021, 11:46 AM IST

மதுரை: மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்டியப்பன் உள்பட 15 பேர், தங்களுக்கு சொந்தமான நிலங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரணை செய்து, உட்பிரிவு செய்தும், உட்பிரிவு செய்யாமலும் பட்டா கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நில அளவை ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை நில அளவை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், 2020 அக்.1ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31ஆம் தேதிவரை பட்டா கேட்டு, 8 லட்சத்து 81 ஆயிரத்து 269 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில், 8 லட்சத்து 62 ஆயிரத்து 787 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 98 விழுக்காடு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளன.

பட்டா விண்ணப்பங்கள் மீது தாமதம் இல்லாமல் முடிவு எடுக்க கூடுதல் நில அளவையர்கள் நியமனம் உள்பட கடந்த 6 மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

2021 ஏப்ரல் மாதம்வரை 5.95 லட்சம் பட்டா விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மாதந்தோறும் 1.5 லட்சம் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் நில அளவைத் துறையில் பணியாளர்கள் உள்ளனர். நிலுவையில் உள்ள பட்டா விண்ணப்பங்கள் மீது ஆறு மாத காலங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மாதம் 2.5 லட்சம் பட்டா விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்படும்

பட்டா வழங்குவதில் தற்போது கடைபிடிக்கப்படும் நவீன முறையால் கிராம நிர்வாக அலுவலரின் வேலைப்பளு குறைந்துள்ளது. பட்டா பணிக்கு கூடுதலாக நூறு உரிமம் பெற்ற நிலஅளவையர்களை ஈடுபடுத்த ரூ.2.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால் கூடுதலாக மாதம் 10 ஆயிரம் பட்டா விண்ணப்பங்களுக்கு தீர்வு காணமுடியும்.

டிஎன்பிஎஸ்சி வழியாக 440 நில அளவையர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவர்கள் நவம்பர் மாதத்திலிருந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, நில அளவை ஆணையரின் பதில் மனு ஏற்கப்படுகிறது. மூன்று வாரங்களில் நில நிர்வாக ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 2021 ஜூலை மாதம் வரை பட்டா விண்ணப்பங்கள் நிலுவை, தீர்வு காணப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்ட நீதிபதி 13ஆம் தேதி விசாரணையை ஒத்திவைத்தார்

இதையும் படிங்க: வெரிகோஸ் நோய் பாதிப்பு: பணியிடம் மாற்ற கோரும் நடத்துநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.