மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் - ராஜமீனா தம்பதியர். இவர்களுக்கு தியாஷினி (வயது 7) என்ற பெண் குழந்தை கீரைத்துறைப் பகுதியில் உள்ள அருப்புக்கோட்டை நாடார் பள்ளியில் பயின்று வந்துள்ளார்.
தியாஷினி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அடையாளம் கண்டறியப்படாத காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தியாஷினியின் மரணத்தின் எதிரொலியாக, வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு, மழைநீர் தேங்கிய இடத்தை சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மதுரை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
மேலும் படிக்க: டெங்கு அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசு பெண் மருத்துவர் உயிரிழப்பு!