ETV Bharat / city

சிறுத்தை நடமாட்டத்தால் கொடிவேரி மக்கள் அச்சம்!

author img

By

Published : Feb 3, 2020, 11:55 PM IST

ஈரோடு: கொடிவேரி கிராமத்தின் கரும்பு தோட்டங்களுக்குள் சிறுத்தை ஒன்று நெடு நாள்களாகவே நடமாடி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பதற்றத்தோடு தங்கள் தோட்டங்களுக்குச் சென்று வருகின்றனர்.

கொடிவேரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
கொடிவேரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொடிவேரி பகுதியில் வசிப்பவர் பீட்டர். இவர் தனது தோட்டத்தில் உள்ள தொழுவத்தில் ஒரு மாடும் கன்றுக்குட்டியும் வளர்த்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு வந்த பீட்டர், அங்குள்ள மாட்டு கொட்டகைக்குச் சென்று பார்த்தபோது அங்கு மாடு மட்டுமே இருந்த நிலையில் கன்றுக்குட்டி காணாமல் போனது.

இதனால் அப்பகுதியில் தேடி பார்த்துள்ளார். அப்போது அங்கு சிறுத்தையின் கால் தடம் பதிவானது தெளிவாகத் தெரிந்தது. அதை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது கரும்பு தோட்டத்தில் கன்று குட்டி கொல்லப்பட்டு பாதி தின்ற நிலையில் கிடந்தது. இதுகுறித்து பீட்டர் உடனே டி.என் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் கன்றுக்குட்டி கொல்லப்பட்ட இடத்தைச் சுற்றிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கொடிவேரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

அந்த சிறுத்தையின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது அப்பகுதியில் வெகுநாள்களாகவே சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கிராம மக்களும் ஆய்வு செய்தபோது திடீரென கரும்பு தோட்டத்தில் இருந்து சிறுத்தை தாவி ஓடியது. இதனால் அலறிப் போன கிராம மக்கள் தப்பி ஓடினர். சிறுத்தை கரும்புக் காட்டில் பதுங்கி இருப்பது உறுதியான நிலையில், அதனைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க;

ஆழ்துளைக் கிணறு விவகாரம் - அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Intro:tn_erd_02_sathy_lepoard_attack_byte_tn10009

Body:சிறுத்தை அட்டகாசத்தால் கொடிவேரி மக்கள் அச்சம் உழவு பணிக்கு செல்ல முடியாமல் தவிப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பெரியகொடிவேரி பீட்டர் என்பவர் தோட்டத்தில் கட்டியிருந்த கன்றுக்குட்டியை காணவில்லை இன்று காலை வழக்கம் போல தோட்டத்திற்கு வந்த பீட்டர் மாட்டு கொட்டகைக்கு சென்று பார்த்தார் அங்கு மாடு மட்டுமே இருந்த நிலையில் கன்றுக்குட்டியை காணாமல் போனது குறித்து தேடிப்பார்த்தார் அப்போது மாட்டுக்கொட்டகை ஒட்டியுள்ள தோட்டத்தில் சிறுத்தையின் கால் தடம் பதிவானது தெளிவாக தெரிந்தது அந்த காலத்தை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது கரும்புக்காட்டில் கன்று குட்டி கொல்லப்பட்டு அதன் உடல் பாதி தின்ற நிலையில் கிடந்தது இதுகுறித்து பீட்டர் டி என் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் அங்கு வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர் கன்றுகுட்டி கொல்லப்பட்ட இடத்தைச் சுற்றிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு அதன் நடமாடிய இடங்களை ஆய்வு செய்து கால் தடத்தை பதிவு செய்தனர் அந்த பதிவின் அடிப்படையில் சிறுத்தை அப்பகுதியில் உலாவியது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அது நடந்து வந்த வழித்தடத்தில் ஆய்வு செய்தனர் அப்போது கரும்பு காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென தாவி குதித்து ஓடியது இதனால் அலறி போன கிராம மக்கள் தப்பி ஓடினர் சிறுத்தை கரும்பு காட்டில் பதுங்கி இருப்பது உறுதியான நிலையில் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் இப்பகுதி மக்கள் முக்கிய தொழில் விவசாயம் என்பதால் காலை மாலை நேரங்களில் பார்ப்பதற்கும் விவசாய பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் தோட்டத்தின் வழியாக செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் சிறுத்தை அச்சம் காரணமாக விவசாயம் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது எனவே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை தனிப்படை அமைத்து அதனை பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் சிறுத்தையை நேரில் பார்த்தது குறித்து பேட்டி அளித்துள்ளனர்

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.