மதுரை வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை பகுதியில் இன்று காலை வாடிப்பட்டியிலிருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது லாரியின் பக்கவாட்டின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அடுத்தடுத்து சென்ற இருலாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கியது.மோதிய வேகத்தில் ஒரு லாரி தடுப்புச் சுவரில் மோதி எதிர் திசையை நோக்கி நிலை தடுமாறி நடுரோட்டில் சாலையை மறித்து நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக மோதிய அந்த நேரத்தில் மதுரையிலிருந்து எதிர் திசையில் எந்த ஒரு வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆம்னி பேருந்தை அதிவேகமாக ஒட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் ஆம்னி பஸ் ஒட்டுனர் சம்பத் என்பவருக்கும், லாரி ஓட்டுனர் முத்துராஜ் என்பவரும் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாடிப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்