ETV Bharat / city

பட்டமளிப்பு விழாவிற்கு எல்.முருகன் அழைக்கப்படுவது அரசியல் சார்பா?

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டு இருப்பது பாஜக அரசியல் சார்பான முடிவாகும் என பல்கலைக்கழக பாதுகாப்பு குழு செயலாளர் முனைவர் முரளி குற்றம் சாட்டியுள்ளார்

பட்டமளிப்பு விழாவிற்கு எல்.முருகன் அழைக்கப்படுவது பாஜகவின் அரசியல் சார்பானதாகும்

author img

By

Published : Jul 13, 2022, 12:21 PM IST

மதுரை: காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் முருகன் அழைக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய பல்கலைக்கழக பாதுகாப்பு குழு செயலாளர் முனைவர் முரளி, சிறப்பு விருந்தினராக பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் எல்.முருகனை ஆளுநர் அழைத்திருப்பது அரசியல் சார்பான முடிவாகும்.

தமிழ்நாட்டில் கல்வி அமைச்சருக்கு உரிய மரியாதை தரப்படாமல் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசையே இவ்விழா குறித்து ஆலோசிக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கதாகும். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பொதுவாக கல்வித்துறையில் மற்றும் கலை துறையில் சாதித்தவர்கள் பட்டமளிப்பு விழாப் பேருரை வழங்க அழைக்கப்படுவது வழக்கம்.

தனியாக சிறப்பு விருந்தினர் என்று அழைப்பது வழக்கம் இல்லை. மேலும் பல்கலைக்கழக ஆட்சி குழுவிற்கும் இத்தகவல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுவது வழக்கம். இந்த வழக்கங்களை மீறி மத்திய அமைச்சர் எல்.முருகனை ஆளுநர் அழைப்பது என்பதும், துணைவேந்தர் ஆளுநர் சொன்னபடி எல்லாம் கேட்பது என்பதும் தமிழ்நாட்டில் உயர்கல்வி அளவில் பிற்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அஞ்சுகிறோம்.

வெளிப்படையாக இப்படி கட்சி நிர்வாகியை சிறப்பு அழைப்பாளராக வர வைப்பது தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் விடும் சவாலாகவே பார்க்கிறோம். தமிழ்நாட்டில் உயர்கல்வி வளாகங்களில் வாக்கு அரசியல் சார்ந்த செயல்பாடுகள் இது வரையில் இல்லை.

பட்டமளிப்பு விழாவிற்கு எல்.முருகன் அழைக்கப்படுவது பாஜகவின் அரசியல் சார்பானதாகும்

ஆனால் இம்மாதிரி நிகழ்வுகளை இனி தொடக்கி வைத்து கல்வி வளாகங்களை அரசியல் கட்சி சார்ந்தவர்களின் செயல்பாட்டுக்குரிய களமாக மாற்றிவிடும் ஆபத்தும் உள்ளது. தமிழ்நாடு அரசு இது குறித்து கடுமையான எதிர்வினையாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டின் கீழ் பயில்வோர் கட்டாய பணி ஒப்பந்தம் - ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற அரசுக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.