ETV Bharat / city

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராக கே. பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

author img

By

Published : Apr 1, 2022, 6:02 PM IST

மதுரை: தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றாகப் பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பொதுமக்களின் நலன் சார்ந்த இயங்கிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநில மாநாடு, மதுரையில் கடந்த மார்ச் 30ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் மூன்றாவது மற்றும் கடைசி நாளான இன்று (ஏப்ரல்.01) அக்கட்சியின் தமிழ்நாடு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது மாநிலச் செயலாளராக செயல்பட்டு வரும் கே.பாலகிருஷ்ணன், மீண்டும் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் 80 பேர் கொண்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிப்படி 72 வயது நிறைவடைந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்திரராசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

80 பேரிலிருந்து 15 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத் ப.செல்வசிங், எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் எஸ்.நூர்முகமது, பி.சண்முகம், என்.குணசேகரன், கே.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், சு.வெங்கடேசன் எம்.பி., கே.பாலபாரதி, ஜி.சுகுமாறன், கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பொறுப்பு வகிப்பார்கள்.

இதையும் படிங்க: புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.