ETV Bharat / city

'திமுகவில் தலைவிரித்தாடும் உள்கட்சி பூசல்...!' - அதிமுக செய்தி தொடர்பாளர் திமுக குறித்து விமர்சனம்

கோவை: திமுகவில் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது எனவும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க அக்கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அதிமுக விமர்சித்துள்ளது.

admk
author img

By

Published : Nov 16, 2019, 1:58 PM IST

இது தொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக செய்தித்தொடர்பாளர் செல்வராஜ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து வெற்றிபெறுவோம் எனவும் மக்களால் ஏற்கப்பட்ட ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுவருவதாகவும் கூறினார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் தோல்வியிலிருந்து மு.க. ஸ்டாலின் மீளவில்லை என்று தெரிவித்த செல்வராஜ், திமுகவில் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க அக்கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டினார்.

அதிமுக செய்தித்தொடர்பாளர் செல்வராஜ்

தொடர்ந்து பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அடுத்தகட்ட நகர்வு நீதிமன்றத்தின் கையில் உள்ளது என்றும் கூறினார்.

Intro:2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்வார் எனவும் திமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுவது உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்

Body:கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர் அதிமுக 2021ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தொடர்ந்து முதலமைச்சராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் மகத்தான வெற்றியும் பெறுவோம் நாங்குநேரி விக்கிரவாண்டி தேர்தலில் தோல்வியிலிருந்து மு க ஸ்டாலின் இன்னும் மீளவில்லை தற்போது தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை சினிமா துறையில்தான் வெற்றிடம் உள்ளதாக தெரிவித்தார் எம்ஜிஆர் சிவாஜிக்குப் பிறகு தமிழக சினிமா துறையில் தொடர்ந்து வெற்றிடம் உள்ளது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆட்சியை தமிழகத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்துள்ளது அடுத்த கட்ட நகர்வு நீதிமன்றத்தின் கையில் உள்ளது அதிமுகவில் ஒட்டுமொத்த நிர்வாகிகள் தொண்டர்கள் சம்மதத்தோடு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்திக்க உள்ளோம் அதிமுக போது தெளிவான தலைமையில் இயங்கி கொண்டிருக்கிறது அதிமுகவிற்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத் தேர்தல் தோல்வியில் இருந்து இன்னும் மீளவில்லை உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஸ்டாலின் அச்சம் கொள்கிறார் என கூறி அவர் திமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது அதனால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி போட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.