மதுரை: ராமேஸ்வரம் - செகந்திராபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தென் மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து மதுரைக் கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி எண் 07685 செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 19 முதல் டிசம்பர் 28 வரை செவ்வாய்க் கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை மறுதினம் காலை 03.10 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 07686 ராமேஸ்வரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 21 முதல் டிசம்பர் 30 வரை வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமைகளில் காலை 07.10 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.
ரயில் நிலைய் சேவை மாற்றம்
விரைவில் இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் இரண்டு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி