ETV Bharat / city

கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தகவல் - health secretary radhakrishnan about corona

மதுரை: கரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில் முடிவுகளை கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டத்தில் மட்டும் 48 மணி நேரம் ஆகிறது என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Aug 16, 2020, 6:02 PM IST

மதுரை முடக்குச்சாலை, திருமலை காலனி பகுதியில் நடைபெற்ற கரோனா அறிகுறி, காய்ச்சல் கண்டறியும் முகாமை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 16) ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சுகாதாரத் துறை உதவி இயக்குநர் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் “தமிழ்நாட்டில் ஆறு வாரங்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. தொடர்ந்து செயல்முறைகளை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகிறோம். மதுரையில் தற்போது தொற்று பரவும் சராசரி அளவானது குறைந்துள்ளது. மதுரையில் 300க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் இதுவரையில் நடத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதால் அலட்சியமாக இருக்கக் கூடாது. மதுரையில் நேரடி தொற்று ஏற்பட்டு இறப்பவர் எண்ணிக்கை குறைவு. வேறு தொற்றுடன் கரோனா தொற்று வருபவர்கள் மட்டும்தான் உயிரிழக்கின்றனர். மாநிலத்தில் சராசரியாக அனைத்து மாவட்டங்களில் 10 மடங்கு பரிசோதனை அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை எடுத்த 24 மணி நேரத்தில் முடிவைக் கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டத்தில் மட்டும் 48 மணி நேரமாகிறது” என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.