மதுரை: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆக்கிரமிப்பிலுள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான இடங்களை அளவீடு செய்யக் கோரிய மனுவிற்கு, நில அளவைருக்கு உரிய கட்டணம் செலுத்தினால் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீனம் சார்பில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 'ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் பல்வேறு மாவட்டத்தில் உள்ளன. இதில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா மனம்காத்தான் கிராமம் பகுதியில் 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த இடத்தை முறைப்படி அரசு நில அளவைக் கொண்டு அளவீடு செய்ய உத்தரவிடுமாறு' மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று (ஆக.16) விசாரணைக்கு வந்தது.
அப்போது குறுக்கிட்ட அவர், 'மதுரை ஆதீன மடம் மிகவும் பிரசித்தபெற்ற ஒரு சைவ மடம் ஆகும்; இந்த மடத்திற்குச்சொந்தமான சொத்துகள் பல உள்ளன. எனவே மனுதாரர் குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்ய வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மதுரை ஆதீனம் தரப்பில் இடத்தை அளவீடு செய்ய அரசுக்கு உரிய தொகை கட்ட வேண்டும். அதன் அடிப்படையில் அந்த இடத்தை அரசு அளவையர் வைத்து அளவீடு செய்து கொடுக்க வேண்டும்' என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்களை அழிக்க வாய்ப்பு; இன்றே விசாரணையைத் தொடங்க சிபிசிஐடிக்கு உத்தரவு!