மதுரை: கல்வி, தொழில் நுட்பம், கலை மற்றும் விளையாட்டில் சாதனை படைத்த மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு படி மருத்துவப் படிப்பு படிப்பதற்கான இடம் ஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி சிவசூர்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் இன்று (ஆக.27) விசாரணைக்கு வந்தது.
இது குறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'மனுதாரர் கிராமப்புற பகுதியில் இருந்து வருகிறார். மேலும் 2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் மருத்துவப் படிப்புக்காக ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என்று இந்த மனுதாக்கல் செய்துள்ளார்.
கலை மற்றும் விளையாட்டில் சாதனை படைத்த மாணவர்களுக்காக, மத்திய அரசு மருத்துவக் கல்வியில் இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இரண்டு இடத்திற்கான பயனாளிகளைக் கண்டறிந்து இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படவில்லை.
இட ஒதுக்கீட்டில் பாகுபாடு கூடாது: இவர்களுக்காக இட ஒதுக்கீடு செய்து மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளது. சாதனை படைத்த மாணவர்களுக்காக வழங்கக்கூடிய இட ஒதுக்கீட்டில் எந்தவிதமான பாகுபாடும் பார்க்கக் கூடாது. மேலும், இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு பயனாளர்களை கண்டறிய இயலவில்லை என்பதை இந்த நீதிமன்றம் ஏற்காது.
மருத்துவப் படிப்பில் இடம் அளிக்க உத்தரவு: மனுதாரர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார், விருது பெற்றுள்ளார். எனவே, மனுதாரர் இந்த இட ஒதுக்கீட்டிற்கு முழுவதும் தகுதி உடையவர் இருந்தும் பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை.
எனவே, மனுதாரருக்கு அடுத்த கல்வியாண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப் படிப்பிற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறது' எனக் கூறினார்.
இதையும் படிங்க: ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் அதிக பணம்... மோசடி நிறுவனத்தில் குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை...