ETV Bharat / city

மதுரை ரயில்வே கோட்டத்தில் பனை பொருள்களுக்கு முதலிடம்

author img

By

Published : Jul 3, 2022, 7:28 PM IST

ரயில் நிலையத்தில் உள்ளூர் பொருள்கள் விற்பனையில் பனை பொருள்களுக்கு முதல் இடம் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பனை பொருள்களுக்கு முதலிடம்
பனை பொருள்களுக்கு முதலிடம்

மதுரை: உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க ரயில் நிலையங்களில் இலவசமாக விற்பனை செய்ய "ஒரு நிலையம் ஒரு பொருள்" திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஜூன் 23 முதல் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்செந்தூர், திருநெல்வேலி, திருமங்கலம், திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் முறையே கடலை மிட்டாய், மக்ரூன், கருவாடு, பனை பொருட்கள், கைலி, சின்னாளபட்டி சேலைகள், சுங்குடி சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விற்பனை ஜூலை 7 வரை நடைபெற இருக்கிறது. ஜூலை 2 வரை பத்து நாட்களில் திருச்செந்தூர், திருநெல்வேலி ரயில் நிலையங்களில் ரூபாய் 2,81,960 மதிப்புள்ள பனைப் பொருள்கள் விற்பனை ஆகி உள்ளன. அதேபோல் மதுரையில் ரூபாய் 1,84,660 மதிப்புள்ள சுங்குடி சேலைகள் விற்பனையாகி உள்ளன. இந்த எட்டு ரயில் நிலையங்களிலும் கடந்த 10 நாள்களில் ரூபாய் 6,91,473 மதிப்புள்ள பொருள்கள் விற்பனையாகி உள்ளன.

பனை பொருள்களுக்கு முதலிடம்

மீண்டும் ஜூலை 8 முதல் 15 நாள்களுக்கு ராமேஸ்வரம், விருதுநகர், தென்காசி, காரைக்குடி, பழனி, பரமக்குடி, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர், கொடைக்கானல் ரோடு, திருமங்கலம், ஒட்டன்சத்திரம், அம்பாசமுத்திரம், மணப்பாறை, புனலூர், கொட்டாரக்கரா, மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், திருச்செந்தூர், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் முறையே கடல்பாசி, சேவு.

பத்தமடை பாய், கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம், கைத்தறி சேலை, ஆயத்த ஆடை, பேப்பர் பொருள்கள், விவசாய விளை பொருள்கள், மூங்கில் இருக்கைகள், மட்பாண்ட பொருள்கள், பலாப்பழம், செட்டிநாடு கொட்டான், பால்கோவா, பன்னீர் திராட்சை, மல்லிகை மலர், வெண்ணை, மர விளையாட்டு பொருள்கள், முறுக்கு, மிளகு, முந்திரி, சுங்குடி சேலை, பனை பொருள்கள், சின்னாளபட்டி சேலை, மக்ரூன், கடலை மிட்டாய், கருவாடு, கைலி போன்ற பொருள்களை விற்பனை செய்ய விருப்ப மனு கோரப்பட்டுள்ளது.

கைவினை மற்றும் கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல்லது மத்திய மாநில அரசு வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்போர், பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள், பதிவு பெற்ற சிறு தொழில் நிறுவனம், பழங்குடி கூட்டுறவு வர்த்தக வளர்ச்சி கூட்டமைப்பில் பதிவு பெற்ற நெசவாளர் ஆகியோர் விருப்ப மனு அளிக்க தகுதி பெற்றவராவர்.

விருப்ப மனு விண்ணப்பங்களை www.sr.indianrail.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விருப்ப மனு விண்ணப்பங்களை ஜூலை 5 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை கோட்ட வர்த்தக பிரிவு அலுவலகத்தில் அளிக்கலாம். அன்று மாலை 03.30 மணிக்கு தகுதி பெற்ற நபர் அல்லது நிறுவனம் தேர்வு செய்து அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு என்ற 9003862967 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் தங்கையை காரில் கடத்திச்சென்ற தனியார் நிறுவன ஊழியர்: சிசிடிவி காட்சி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.