ETV Bharat / city

மதுரையில் ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் தீ விபத்து - மதுரையில் தீயணைக்கும் பணி தீவிரம்

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் ஒரே மாதத்தில் நிகழும் மூன்றாவது தீ விபத்து இது என்பதால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.

மதுரையில் மீண்டும் தீ விபத்து
மதுரையில் மீண்டும் தீ விபத்து
author img

By

Published : Nov 22, 2020, 9:48 AM IST

Updated : Nov 22, 2020, 10:17 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையடுத்த விளக்கத்தூண் பகுதியில், பைசர் அகமது என்பவருக்கு சொந்தமான பிரபல ஜவுளிக் கடை ஒன்று உள்ளது. இன்று அதிகாலை அக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, மள மளவென தீ அனைத்து பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மதுரையில் தீ விபத்து

தீயை முழுமையாக அணைக்கும் பணியில், 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. அப்பகுதியில் இம்மாதத்தில் ஏற்பட்டுள்ள மூன்றாவது தீ விபத்து இது என்பதால், சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளியன்று ஏற்பட்ட ஜவுளிக்கடை தீ விபத்தின்போது, தீயணைப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் இருவர், விபத்துக்குள்ளான கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

ஆதலால் இம்முறை அதீத பாதுகாப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் தீயணைப்பு பணி நடைபெற்றுவருகிறது. முன்னதாக ஏற்பட்ட தீ விபத்துக்களின் எதிரொலியாக தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக்கூறி, முதல்கட்டமாக மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 500 கடைகளுக்கு தீயணைப்புத் துறையினர் நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மதுரை தீ விபத்து குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்துக! நீதிமன்றத்தில் முறையீடு!

Last Updated : Nov 22, 2020, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.