ETV Bharat / city

தேர்தல் முன்விரோதம் காரணமாக இரட்டைக்கொலை - இருவர் கைது!

author img

By

Published : Oct 26, 2020, 7:30 AM IST

மதுரை: குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் தேர்தல் முன்விரோதமே காரணம் என தெரியவந்துள்ளது.

madurai
madurai

மதுரை மாவட்டம் குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணராஜன் மற்றும் முனியசாமி இருவரும் அக்.12ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் என்பவரின் சகோதரர் செந்தில், கொலை செய்யப்ப கிருஷ்ணராஜன் உறவினர் பாலகுரு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், "உள்ளாட்சி தேர்தலின்போது திமுக சார்பில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட செந்திலின் மனைவிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணராஜன் ஆதரவு தெரிவிக்காமல் இருந்தார்.

அதன் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளது" என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சாலையில் துடிதுடித்த ரியல் எஸ்டேட் அதிபர்; சரமாரியாக வெட்டி படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.