மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில் ரூ.121.80 கோடி மதிப்பிலான புதிய கட்டட கட்டுமான பணிகள் தொடங்கவுள்ளன. ஆறு தளங்களுடன் கட்டப்படவுள்ள இந்தப் புதிய டவர் பிளாக் கட்டடத்தில் 22 அறுவை சிகிச்சை அரங்குகள், 26 பேர் வரை செல்லக்கூடிய மின் தூக்கிகள், சூரிய ஒளிமூலம் சுத்திகரிக்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவை அமைய உள்ளன.
இந்தத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் சென்னையிலிருந்து தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
இந்த நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மருத்துவமனை முதல்வர் சங்குமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயார் - ஆசிரியர்கள் நம்பிக்கை