ETV Bharat / city

கணினி ஆசிரியர் தேர்வில் சிக்கல்? ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவு! - கணினி ஆசிரியர் தேர்வில் சிக்கல்

மதுரை: ஜூன் 23 மற்றும் ஜூன் 27ஆம் தேதி நடந்த கணினி ஆசியர்களுக்கான தேர்வு முடிவுக்கு, இடைக்கால தடை விதிக்கக்கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Jul 4, 2019, 8:17 AM IST

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலைச் சேர்ந்த செந்தில் முருகன் உள்ளிட்ட நான்கு பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த மார்ச் ஒன்றாம் தேதி அன்று, கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான இணையதளம் மூலம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்விற்கு நானும் விண்ணப்பித்திருந்தேன். கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று, எனக்குத் தென்காசி ஆலங்குளத்தில் உள்ள மரியம் பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்விற்கான மையம் ஒதுக்கப்பட்டது. காலை 7.30 மணிக்குத் தேர்வு மையத்திற்குச் சென்றேன்.

இடைப்பட்ட நேரத்தில் சில தேர்வர்கள் கணினியிலிருந்த விடைகளைக் குறித்துக் கொண்டு மற்றவர்களிடம் பகிர்வதும். விடைகளுக்குக் குறிப்பெடுப்பதுமாக இருந்தனர். மேலும் சிலர் கைப்பேசி மூலம் விடைகளைப் பிறருக்குப் பகிர்ந்து கொண்டிருந்தனர். இதனால் வினாக்கள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது. போதிய கணினி வசதி இல்லாமல் தேர்வர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள், இங்கு நடந்த முறைகேடுகள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் உலாவியது.

இச்சம்பவம் குறித்த செய்திகள் பல ஊடகங்களிலும் வெளியாயின. இது போன்ற சூழலால் சில தேர்வு மையங்களில் இரவு 8மணி வரை தேர்வு நடந்தது. இந்நிலையில் ஜூன் 24ஆம் தேதி அன்று ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், இணைய சேவை பாதிக்கப்பட்டதால் தேர்வெழுத இயலாமல் போனவர்களுக்கு 2ஆம் கட்டமாக ஜூன் 27ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

அதிலும் மூன்று தேர்வு மையங்களுக்கு மட்டுமே மறு தேர்வு நடைபெறுவதாகக் கூறியுள்ளது. ஆனால் பல தேர்வு மையங்களில் இது போன்ற முறைகேடு நடைபெற்றுள்ளது. அதோடு இரண்டு வகை வினாக்களுக்குத் தேர்வு எழுதினால் தேர்வின் தரம் பாதிப்பதுடன், தேர்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து தேர்வாணையத்திற்குப் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே நடைபெற்ற இரு தேர்வுகளுக்குமான முடிவை அறிவிக்க இடைக் கால தடை விதித்தும், இது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை நடத்த ஆசிரியர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டு, நடைபெற்ற இரு தேர்வினையும் ரத்து செய்து 119 தேர்வு மையங்களுக்கும் முறையான மறு தேர்வு நடத்தப்பட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணக்குமார் முன் புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை குறித்து ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்கக் கூறி வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Intro:கடந்த ஜூன் 23 மற்றும் ஜூன் 27 ம் தேதி நடந்த கணினி ஆசியர்களுக்கான தேர்வு முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:கடந்த ஜூன் 23 மற்றும் ஜூன் 27 ம் தேதி நடந்த கணினி ஆசியர்களுக்கான தேர்வு முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலைச் சேர்ந்த செந்தில் முருகன் உள்ளிட்ட நான்கு பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், " கடந்த மார்ச் 1 ம் தேதி அன்று கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுயிருந்தது. இந்த தேர்விற்கு நானும் விண்ணப்பித்திருந்தேன். கடந்த ஜூன் 23 ம் தேதி அன்று எனக்கு தென்காசி ஆலங்குளத்தில் உள்ள St. மரியம் பாலிடெக்னிக் கல்லூரியில் தேரிவிற்கான மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது
காலை 7.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு சென்றேன்.

இடைப்பட்ட நேரத்தில் சில தேர்வர்கள் கனிணியில் இருந்த விடைகளை குறித்துக் கொண்டு மற்றவர்களிடம் பகிர்வதும். விடைகளுக்கு குறிப்பெடுப்பதுமாக இருந்தனர். மேலும் சிலர் மொபைல் மூலம் விடைகளை பிறருக்கு பகிர்ந்து கொண்டிருந்தனர்.

இதனால் வினாக்கள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது, போதிய கணினி வசதி இல்லாமல் தேர்வர்கள் மிகுந்த சிரமத்திர்குள்ளானார்கள், இங்கு நடந்த முறைகேடுகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வளைதளங்களில் வைரல் ஆனது.

இந்த சம்பவம் பல ஊடகங்களிலும் வெளியானது. இது போன்ற சூழலால் சில தேர்வு மையங்களில் இரவு 8 மணி வரை தேர்வு நடந்தது.

இந்நிலையில் ஜூன் 24 ம் தேதி அன்று ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், இணையசேவை பாதிக்கப்பட்டதால் தேர்வெழுத இயலாமல் போனவர்களுக்கு 2 ம் கட்டமாக ஜூன் 27 ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. அதிலும் மூன்று தேர்வு மையங்களுக்கு மட்டுமே மறு தேர்வு நடைபெறுவதாக கூறியுள்ளது. ஆனால் பல தேர்வு மையங்களில் இது போன்ற முறைகேடு நடைபெற்றது.

அதோடு இரண்டு வகை வினாக்களுக்கு தேர்வு எழுதினால் தேர்வின் தரம் பாதிப்பதுடன், தேர்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது குறித்து தேர்வாணையத்திற்கு புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே நடைபெற்ற இரு தேர்வுகளுக்குமான முடிவை அறிவிக்க இடைக் கால தடை விதித்தும், இது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை நடத்த ஆசிரியர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டு, நடைபெற்ற இரு தேர்வினையும் ரத்து செய்து 119 தேர்வு மையங்களுக்கும் முறையான மறு தேர்வு நடத்தப்பட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணக்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது மனுதாரரின் கோரிக்கை குறித்து ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்கக் கூறி வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.