கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் 18 - 45 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறது.
அதன்படி, அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து நேற்று (மே.18), கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை மதுரை அரசு மருத்துவமனை அருகில் உள்ள தடுப்பூசி மையத்தில் செலுத்திக் கொண்டார்.
அதையடுத்து அவர், "கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு தேவை. கரோனா தொற்று குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. அனைவரும் தங்களது குடும்ப நலனுக்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!