மதுரை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடி அகழாய்வு களத்தை பார்வையிட்டார்.
பின்னர், மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நன்மாறனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இன்றிரவு மதுரை விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் ஓய்வெடுக்கிறார். நாளை (அக். 29) காலை 7:30 மணியளவில் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் அஞ்சலி செலுத்துகிறார்.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வு தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...