ETV Bharat / city

முறைகேடு புகார்; மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு நோட்டீஸ்!

மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைதூர தேர்வு முறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு புகார்  மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு நோட்டீஸ்  மதுரை உயர் நீதிமன்றக் கிளை  தொலைதூர கல்வி முறைகேடு  Chennai HC Branch Notice to Madurai Kamarajar University Vice chancellor  Madurai Kamarajar University  Madurai Kamarajar University Distance Education

author img

By

Published : Oct 28, 2020, 3:14 PM IST

Updated : Oct 28, 2020, 3:33 PM IST

மதுரை: மதுரை எஸ்.எஸ் காலனியைச் சேர்ந்த லியோனல் ஆண்டனிராஜ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சுமார் 1.25 லட்சம் மாணவர்கள் தொலைதூர கல்வி மூலமாக பயின்று வருகின்றனர். இதற்காக பல மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே தொலைதூர கல்விக்கான தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், தற்போது கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தொலைதூரக் கல்விக்கான தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஒரு சில மையங்களில் தேர்வர்கள், அவரவர் இருக்கும் இடங்களில் தேர்வு எழுத அனுமதி தந்ததோடு, விடைத்தாள்களை பல மாதங்கள் கழித்து தேர்வு மையங்களுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழக விசாரணை குழு மற்றும் சிண்டிகேட் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க கூறலாம் என முடிவெடுத்தனர்.

ஆகவே மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைதூர தேர்வு முறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளவும் அதனை நீதிமன்றம் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு, இது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், தேர்வு முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, துணை வேந்தர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: முழு ஊரடங்கு உத்தரவு தேவை - மதுரை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

Last Updated : Oct 28, 2020, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.