ETV Bharat / city

'நாட்டுக்காக விளையாடியும் வருமானத்துக்கு வழியில்லை' - மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டன் சச்சின் சிவா வேதனை

author img

By

Published : Dec 10, 2019, 12:40 PM IST

மதுரை: நாட்டுக்காக விளையாடியும் வருமானத்துக்கு வழியில்லை என்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா வேதனை தெரிவித்துள்ளார்.

Sachin Shiva
Sachin Shiva

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட் போட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நவம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநில அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடரில் தமிழ்நாடு அணிக்காக ஐந்து போட்டிகளில் களமிறங்கி, இரண்டு அரை சதங்களுடன் அதிரடியாக 180 ரன்கள் குவித்த, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சிவகுமார் என்ற சச்சின் சிவா, தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அணியை வழி நடத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த சச்சின் சிவா கூறுகையில்,

சிறு வயதில் இருந்தே எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம். கல்லூரியில் படிக்கும்போதுதான், மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக கிரிக்கெட் போட்டி இருப்பது தெரிந்தது. என்னுடைய திறமையை நிரூபித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு அணியில் இடம் பிடித்தேன். 2013ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் தொடரில் கர்நாடகாவை வீழ்த்தி, மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில், 'மேன் ஆப் தி சீரியஸ்' வென்றதால், எனக்கு கேப்டன் பொறுப்பு கிடைத்தது.

2017ஆம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், 64 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தேன். அதேபோல், 2018ல் அசாம் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தேன். தமிழ்நாடு அணியில், ஆல் ரவுண்டராக சிறப்பான முறையில் செயல்பட்டதால், இந்திய அணிக்கு 2015ல் தேர்வு செய்யப்பட்டேன்.

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா

கிரிக்கெட் வாழ்க்கையை தொடருவதில் உள்ள சவால்கள் என்ன?

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் தமிழ்நாடு அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் பல போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளோம். அதனால் கோப்பைகளும், பதக்கங்களும் கிடைக்கிறதே தவிர, வருமானத்துக்கு வழியில்லை. தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைக்கிறது. ஆனால், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட கிடைப்பதில்லை.

எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானம் இல்லாததால், வேறு வேலைக்கு செல்லலாம் என நினைத்தேன். ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் மாதம்தோறும் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து, கிரிக்கெட்டை தொடர வழிவகை செய்துள்ளார். மாற்றுத்திறனாளி வீரர்களின் நிலைமை தற்போது வரை கவலைக்கிடமாகவே இருக்கிறது. மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைப்பதைப் போல, எங்களுக்கு நன்கொடை கிடைப்பதில்லை. கிரிக்கெட்டில் சாதிக்கும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு சச்சின் சிவா கூறினார்.

பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகியவை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தை அங்கீகரித்து தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளி வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.

Intro:நாட்டிற்காக விளையாடியும் வருமானத்திற்கு வழியில்லை! ஆதங்கப்படுகிறார் தமிழக மாற்றுத்திறனாளி கேப்டன் சச்சின் சிவா

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தேசிய அளவிலான, மாற்றுத்திறனாளிகளுக்கான, 'டி-20' கிரிக்கெட் போட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நவ., 28ம் தேதி துவங்கியது.

இதில், தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம் உட்பட, எட்டு மாநில அணிகள் பங்கேற்று விளையாடின. கடந்த, 3ம் தேதி இறுதிப் போட்டி நடந்தது. இதில், தமிழகம் மற்றும் குஜராத் அணிகள் மோதின.போட்டியில், 'டாஸ்' வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதில், 19.3 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, குஜராத் அணி, 136 ரன்கள் எடுத்தது.இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி, 67 ரன்கள் மட்டுமே எடுத்து, 16.3வது ஓவரிலேயே, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், 69 ரன்கள் வித்தியாசத்தில், குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.ஐந்து போட்டிகளில், இரண்டு அரை சதங்களுடன், அதிரடியாக, 180 ரன்கள் குவித்த, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, தமிழக அணி வீரர், சிவகுமார் இந்த தொடரின், தொடர் நாயகனாக, தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக அணியை வழி நடத்திய, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் சிவா கூறுகையில், ''தோல்விக்கான காரணங்களை இனங்கண்டு, அடுத்தடுத்த போட்டிகளில், போதிய பயிற்சியுடன், வெற்றி பெறுவதற்கான, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்,'' என்றார்.

மதுரை மாவட்டம், தெப்பக்குளம் பகுதி, மருது பாண்டியர் நகரில் வசித்து வருகிறேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம். பள்ளிக்கூடத்தில், ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடைய ஆர்வத்தை பார்த்து, நண்பர்கள் சிலர் கிரிக்கெட் விளையாட்டில் அனுமதித்தனர். அதற்கு பின், உற்சாகத்துடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்.

மதுரை, கே.கே.நகர், வக்பு வாரிய கல்லுாரியில், பி.காம்., படிக்கும்போது தான், மாற்றுத்திறனாளிகளுக்காக, தனியாக கிரிக்கெட் போட்டி இருப்பது தெரிந்தது. என்னுடைய திறமையை நிரூபித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக அணியில் இடம் பிடித்தேன்.

கடந்த, 2013ல், தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் தொடரில், கர்நாடகாவை வீழ்த்தி, மதுரை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில், 'மேன் ஆப் தி சீரியஸ்' வென்றதால், எனக்கு கேப்டன் பொறுப்பு கிடைத்தது. அதன் பின், தற்போது வரை கேப்டனாக, தமிழக அணியை வழிநடத்தி வருகிறேன்Body:காஷ்மீரில், 2017ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில், 64 பந்துகளில், 115 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தேன். அதேபோல், 2018ல், அசாம் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், 16 பந்துகளில், 50 ரன்கள் எடுத்தேன். இந்த இரண்டு சாதனைகளையும், இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.தமிழக அணியில், ஆல் ரவுண்டராக, சிறப்பான முறையில் செயல்பட்டதால், இந்திய அணிக்கு, 2015ல் தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக விளையாடி வருகிறேன்.

கிரிக்கெட் வாழ்க்கையை தொடருவதில் உள்ள சவால்கள்?

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில், தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் பல போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளோம். அதனால் கோப்பைகளும், பதக்கங்களும் தான் கிடைக்கிறதே தவிர, வருமானத்திற்கு ஒன்றும் வழியில்லை.சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில், விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு, மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைக்கிறது. ஆனால், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் கூட கிடைப்பதில்லை.

எனக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானம் இல்லாமல், கிரிக்கெட் விளையாடாமல் வேறு வேலைக்கு செல்லலாம் என நினைத்தேன். ஆனால், *நடிகர் சிவகார்த்திகேயன் மாதந்தோறும், 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து, கிரிக்கெட்டை தொடர வழி வகை செய்து கொண்டு இருக்கிறார்*.அதேபோல, எங்கள் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்க தலைவர் ரமேஷ் கண்ணா, ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து உறுதுணையாக இருக்கிறார். அதனால், என்னால் கொஞ்சம் சமாளிக்க முடிகிறது.

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களின் நிலைமை, தற்போது வரை கவலைக்கிடமாகவே இருக்கிறது. மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைப்பதை போல, எங்களுக்கு நன்கொடையாளர்கள் கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்கள், நிறைய போட்டிகளை நடத்தி, நன்கொடை மற்றும் வேலை வாய்ப்பை வழங்கலாம்.கிரிக்கெட்டில் சாதிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்கி உதவி செய்ய வேண்டும்.

அதேபோல, பி.சி.சி.ஐ., தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் போன்றவை, மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தை அங்கீகரித்து, உதவி செய்தால், இதர கிரிக்கெட் வீரர்களை போல், எங்கள் வாழ்க்கையும் மாறிவிடும்
என்றார்..Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.