சினிமா ஃபைனான்சியரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.என். அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை அலுவலகங்களைத் தொடர்ந்து மதுரை தெற்குமாசி வீதியிலுள்ள அலுவலகம், தெப்பக்குளம் தமிழன் தெருப்பகுதியில் வசிக்கும் அவரது நண்பர் சரவணன் என்பவரின் வீடு, திருப்பரங்குன்றம் பாலாஜி நகர்ப்பகுதியில் மற்றொரு நண்பரின் வீடு ஆகிய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
மேலும் அவருக்குச் சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். ஆறு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள், நகை, பணம் ஆகியவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளும் வருமான வரித்துறையினர்
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் அன்புச்செழியனின் உறவினர்கள், சினிமா தொடர்பு நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர். இதற்கிடையே இரண்டாம் நாளான இன்று பல கோடிம் ரூபாய் மதிப்பிலான பணமும் பொருள்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகினாலும், அதனை வருமானவரித் துறையினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.