ETV Bharat / city

தேஜஸ் வேகத்தில் சென்னையை அடைந்து மீண்டும் சாதனைப் படைத்த வைகை எக்ஸ்பிரஸ்

author img

By

Published : Oct 16, 2022, 7:55 PM IST

மதுரையிலிருந்து 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு 16 நிமிடம் முன்பாகவே சென்னை சென்றடைந்து மீண்டும் வரலாற்றுச் சாதனைப் படைத்தது, வைகை எக்ஸ்பிரஸ் ரயில். இது தேஜஸ் ரயிலின் வேகத்திற்கு இணையானது என்று ரயில் ஆர்வலர்கள் பெருமிதம் கொண்டனர்.

தேஜஸ் வேகத்தில் சென்னையை அடைந்த வைகை எக்ஸபிரஸ்

மதுரை: மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் பகல் நேர விரைவு ரயிலாக தென் மாவட்ட மக்களின் ரயில் பயணத்திற்குப் பெரிதும் சேவை புரிந்து வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை கடந்த 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் தொடங்கியது.

நாள்தோறும் காலை 7.10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.14-க்கு சென்னையைச் சென்றடையும். மொத்த பயண நேரம் 7.04 மணி நேரம். அதேபோன்று பிற்பகல் 1.50-க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 9.15-க்கு மதுரை வந்தடையும். மொத்தப்பயணம் 7.25 மணி நேரம். சென்னையையும் மதுரையையும் இணைக்கின்ற பகல் நேர சூப்பர் ஃபாஸ்ட் ரயில், வைகை எக்ஸபிரஸ் ஆகும்.

இந்நிலையில் நேற்று(அக்.15) மதுரையிலிருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஒன்று தாமதமாக வந்ததால், காலை 30 நிமிடங்கள் தாமதமாக 7.40-க்கு புறப்பட்டுச்சென்றது. ஆனாலும் சென்னைக்குச் சென்றடைய வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட, 497 கி.மீ. தூரத்தைக்கடந்து 16 நிமிடங்கள் முன்பாகவே சென்றடைந்து சாதனைப் படைத்தது.

இந்த ரயிலை இயக்கிய லோகோ பைலட் ரவி சங்கர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பிரத்யேகமாக பேசுகையில், ”அனைத்து மட்டத்திலும் உள்ள ரயில்வே பணியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்களின் திறமையான வழிகாட்டுதல்தான் இந்த சாதனைக்குக்காரணம்.

இதேபோன்ற சாதனையை வைகை எக்ஸ்பிரஸ் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதியும் நிகழ்த்தியிருந்தது. ஆனால் நேற்று அதையும் விட மூன்று நிமிடங்கள் குறைவாக சென்றடைந்தது சாதனைக்குரிய வேகமாகும். இந்தியன் ரயில்வே அனுமதிக்கும்பட்சத்தில் அனைத்து ரயில்களையும்கூட இதைவிட குறைவான நேரத்தில் இயக்க முடியும். அந்த அளவிற்கு நாம் தற்போது தொழில்நுட்பத்தில் உயர்ந்துள்ளோம்.

தற்போது தேஜஸ் ரயில் சற்றேறக்குறைய இதே வேகத்தில்தான் சென்னைக்கும் மதுரைக்கும் பயணிக்கிறது. அதற்கு இணையாக வைகை எக்ஸ்பிரஸ் அந்த சாதனையைப்படைத்து வருவது, அதன் ஓட்டுநராக எனக்குப் பெருமையே. இத்தனைக்கும் தேஜஸ் ரயிலுக்கான நிறுத்தங்கள் வெறும் இரண்டு.

ஆனால், வைகைக்கு 11 நிறுத்தங்கள் என்பதோடு ஒப்பிட்டு வைகையின் சாதனையை எண்ணிப் பார்க்கலாம். இந்த சாதனைப் பயணத்தில் என்னுடன் துணை லோகோ பைலட்டாக இருந்தவர், முத்துக்குமார் ஆவார்” என்றார்.

இதுகுறித்து ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் கூறுகையில், 'ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் ஆகியோரோடு மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஸ்டேசன் மாஸ்டர்களின் ஒருங்கிணைந்த பங்கேற்புதான் இந்த சாதனைக்கு முக்கியக்காரணம்.

வைகை எக்ஸ்பிரஸ் தாமதமாக வருவதை விரும்பாத அதே நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு இயங்கியதும் பாராட்டுதலுக்குரியது. வைகை எக்ஸ்பிரஸ் லோகோ பைலட் ரவி சங்கர், இந்த தாமதத்தைக் குறைப்பதற்கு இயன்றவரை முயற்சி மேற்கொண்டார்.

இதன் காரணமாக 6 மணி நேரம் 34 நிமிடங்களில் சென்னை வந்தடைந்து வைகை எக்ஸ்பிரஸ் படைத்த சாதனை என்னைப் போன்ற ரயில் ஆர்வலர்களுக்கு மிகுந்த பெருமையாகும். பொதுவாகவே தெற்கு ரயில்வே அலுவலர்கள் ரயில்கள் தாமதமாக வருவதை எப்பாடுபட்டேனும் ஈடு கட்டி வருகின்றனர்.

பயணிகளின் வசதி கருதி நேற்றைய தினம் மேற்கொண்ட அவர்களின் முயற்சியில், இதுவரை இல்லாத அளவுக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சாதனைப் பயணம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது’ என்றார்.

இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறையின் திட்ட செயல்பாட்டில் இரட்டை இலை லோகோ - தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.