மதுரை தோப்பூரில் 201.75 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதியளித்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டினார்.
ஒன்றிய அரசின் பதில்
2022ஆம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் நிறைவு பெறும் என்று அப்போது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, வெறும் சுற்றுச்சுவரோடு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஒரு புறம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி வழங்கும் ஜப்பானிய ஜைகா நிறுவனத்தோடு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை என ஒன்றிய அரசு பதிலளித்திருந்தது.
மீம்ஸ் போடும் வலைதள வாசிகள்
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை அமையவில்லை என்பதை சுட்டிக்காட்டி செங்கலை தூக்கிக்கொண்டு பரப்புரை மேற்கொண்டார். அந்தப் பரப்புரை பெரிதாக பேசப்பட்டது.
இந்நிலையில், தற்போது வலைதள வாசிகள், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த பல்வேறு மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். இதற்கிடையே 'எய்ம்ஸ் பிரிக்ஸ்' என்ற பெயரில் செங்கல் ஏற்றும் லாரி ஒன்றின் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் எப்போ வரும்? - ஷாக் கொடுத்த ஒன்றிய அரசு