ETV Bharat / city

'ஏழை எளியோருக்குப் பயன்படும் திட்டங்களை அதிமுக வரவேற்கும்'

'முதலமைச்சரின் மினி கிளினிக்' எனப் பெயர் மாற்றினாலும் ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் வகையிலான திட்டங்களை அதிமுக வரவேற்கும் என அக்கட்சியின் மூத்தத் தலைவர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

aiadmk ex minister sellur k raju press meet, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
aiadmk ex minister sellur k raju press meet
author img

By

Published : Nov 29, 2021, 10:51 AM IST

மதுரை: மதுரை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்துப் பிரிவில் எட்டு கிளை நிர்வாகிகளுக்குத் தேர்தல் நடைபெற்று முடிவுற்றது. இதில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலை கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு நேற்று (நவம்பர் 29) வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளரைச் சந்தித்தபோது, "அதிமுகவில் மூத்தத் தலைவர்களுக்கு எந்தப் பின்னடைவும் கிடையாது. அன்வர்ராஜா பொது இடங்களில் ஒருமையில் பேசியது அனைத்து நிர்வாகிகளிடம் மனக்கசப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவின் ஆரோக்கியமான அரசியல்

இதுபோன்ற நிலையில் பொறுமையாக கட்சித் தலைமை, நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். மேலும், அன்வர்ராஜா அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். தொடர்ந்து ஆரோக்கியமான அரசியலை அதிமுக நடத்திவருகிறது.

அம்மா மினி கிளினிக் பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருந்துவந்தது. குறிப்பாக நகர்ப்புறம், கிராமப்புறங்கள் சேர்த்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான கிளினிக் தொடங்கி அனைத்து நேரங்களிலும் மருத்துவர், செவிலியர் பணியில் இருந்தனர்.

ஏழை எளியவர்களுக்குப் பயன்படும் திட்டங்களை அதிமுக வரவேற்கும் - செல்லூர் ராஜு

ஜெ. இல்லத்தை நினைவிடமாக்கவும்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடைநிலைப் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றிவருகின்றனர். முதலமைச்சரின் மினி கிளினிக் என்று பெயர் மாற்றினாலும் ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் வகையிலான திட்டங்களை அதிமுக வரவேற்கும்.

நினைவிடம் என்பது வேறு, வாழ்ந்து மறைந்த இடம் என்பதும் வேறு, வேதா இல்லத்தில் ஜெயலலிதா வாழ்ந்த நினைவுகள் உள்ளன. எனவே உச்ச நீதிமன்றத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ முறையீடு செய்து தமிழ்நாடு அரசு வேதா இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: குழந்தைக்கு 'சோழன்' என்று பெயர் வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: திருவேற்காடு ஆய்வில் ருசிகரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.