மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோகுல்ராஜ், குமார், சதீஷ்குமார், ரஞ்சித், ரகு உள்பட 10 பேரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதில், "இந்த வழக்கில் நோக்கம், சிசிடிவி காட்சிகள், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது வழக்கின் தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கை ஜூலை 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும் ஜாமீன் கோரிய மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் போஸ்டர் யுத்தம்!