ETV Bharat / city

குஷ்பூ இணைந்தது கூட்டணிக்குப் பலம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை: நடிகை குஷ்பூ பாஜகவில் இணைந்தது கூட்டணிக்குப் பலமாக அமையும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
author img

By

Published : Oct 14, 2020, 3:58 PM IST

மதுரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், 'உலக அளவிலான தகவல் தொழில்நுட்பத் துறை மாநாடு 2020 இணையம் வழியாக 5 நாள்கள் நடைபெறுகிறது. அந்த மாநாடு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுவருகின்றன' எனத் தெரிவித்தார்.

அதையடுத்து அவர், 'கரோனா ஊரடங்கில் பண்டிகை காலங்களை மக்கள் கவனமாக கையாள வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்ற வேண்டும். வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

அதனால் 38 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களை சமாளிக்க தமிழ்நாடு தயாராக உள்ளது' எனத் தெரிவித்தார்.

அதேபோல குஷ்பூ குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது, 'நடிகை குஷ்பூ பாஜகவில் இணைந்த காரணம் குறித்து அவரே பதிலளித்து விட்டார். அவரின் இந்த முடிவு கூட்டணிக்குப் பலமாக அமையும் எனத் தெரிவித்தார். மேலும் தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக குழுவை அமைத்துள்ளது. ஆனால், அதிமுக அக்களத்தில் முதலில் உள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, குடியரசுத் தலைவர் ஆறுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.