ETV Bharat / city

மதுரை அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது - பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மதுரை அருகே 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 42 வயதுடைய நபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிறுமிக்கு பாலியல் தொல்லை
author img

By

Published : Sep 2, 2021, 5:02 PM IST

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் இரண்டாம் வகுப்புப் படித்துவருகிறார். இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்துவரும் 42 வயது மதிக்கத்தக்க நபர் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு இதை யாரிடமும் சொல்லக்கூடாது எனச் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில், வலியால் துடித்த சிறுமியை அவரது பெற்றோர் அரசு இராசாசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்தப் பாலியல் சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சாந்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் இணைந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு - தந்தை உள்ளிட்ட இருவர் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.