ETV Bharat / city

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - சகோதரன் உட்பட இருவர் கைது - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை புரிந்ததாக மாணவியின் சகோதரர் உட்பட இருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
author img

By

Published : Jan 5, 2022, 11:02 PM IST

மதுரை: ராஜாஜி அரசு மருத்துவமனையில் 13 வயது சிறுமி கர்ப்பமாக உள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிற்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து, மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கீதாதேவி தலைமையில் சிறுமியிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டது.

தோழியின் சகோதரரால் பாலியல் தொந்தரவு

விசாரணையில், மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனியார்ப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் பயிலும் தோழி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி, அடிக்கடி தோழி வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். அப்போது தோழியின் சகோதரர் சரவணன் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த சிறுமி கடந்த அக்டோபர் மாதம் தோழி வீட்டுக்குச் சென்றபோது தோழியின் அண்ணன் சரவணன், சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்ற சரவணன், சிறுமி தனியாக இருக்கும் போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

உடன் பிறந்த சகோதரரின் பாலியல் தொந்தரவு

இதனிடையே சரவணனுடன், சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொடர்பு இருப்பது சிறுமியின் சகோதரருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவர், தன் சகோதரியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறுமிக்கு உடல்நலம் குன்றிய நிலையில், பெற்றோர் சிறுமியைச் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

காவல்துறை விசாரணை

இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சரவணன் மற்றும் சிறுமியுடன் பிறந்த சகோதரர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை உடன் பிறந்த சகோதரனே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவ மாணவியர்கள் - நல்ல எதிர்காலத்தை எண்ணிச் செயல்படுங்கள்

தமிழ்நாடு அரசு இது போன்று மாணவ, மாணவியர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், ஆபாச மிரட்டல்கள் மற்றும் அதனால் எதிர்கொள்ளும் பாதிப்புகளிலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவே உதவி மையங்கள் மற்றும் புகார் எண்கள் போன்றவற்றை அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இது போன்று அவசியமற்ற செயல்களினால் வரும் பாதிப்புகளைச் சந்திப்பதோடு மட்டுமில்லாமல், அதை எதிர்கொள்வதற்காக மற்றுமொரு பக்குவமற்ற செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தங்கள் குடும்பத்திற்கும் தங்களின் எதிர்காலத்திற்கும் நன்மைகளை தரப்போவதில்லை என்பதை மனதில் எண்ணிட வேண்டும்.

எனவே, தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய புகார்களை உரிய முறையில் பெற்றோர்களின் மேற்பார்வையில் அணுகுவதே அவைகளுக்குத் தீர்வாகும்.

விழிப்புடன் இருந்தால் எதையும் தவிர்க்கலாம்

இது போன்ற தவறான சம்பவங்களிலிருந்து பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைக் காத்துக் கொள்ள தங்களின் குழந்தைகள் யார் யாருடன் நண்பர்களாக உள்ளார்கள் என்பது பற்றியும் அவர்களின் நட்பு வட்டாரங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையைத் தரக்கூடியதாக உள்ளதா? என்று கவனம் கொள்வதன் மூலம் இது போன்றவற்றில் செயல்பாடுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இயலும்.

இதுபோன்ற செயல்கள் நடக்கும்பொழுது பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் 14417 என்ற உதவி எண்ணை அழைத்து குறைகளைப் பதிவுசெய்யுங்கள்.

இதையும் படிங்க: 2 நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.