ETV Bharat / city

ரூ.21.46 கோடி மதிப்பிலான மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு

மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு சொந்தமான 21.46 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயில் நிலம் மீட்பு
மீனாட்சியம்மன் கோயில் நிலம் மீட்பு
author img

By

Published : May 26, 2022, 7:46 AM IST

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மெய்க்காவல் மானியம் பெயரில் மதுரை பொன்மேனி வார்டு 23, பிளாக் 26 பகுதியில் உள்ள மொத்தமுள்ள 66.67 ஏக்கர் பரப்பு கொண்ட நிலங்களில், நன்செய் புல எண்கள் முறையே 200 ல் மொத்தப் பரப்பு 3.06 ஏக்கரில் 1.94 ஏக்கர், 202ல் 4.39 ஏக்கர், 203ல் 4.80,204 ல் 3.05 ஏக்கர், 205ல் 3.71 & 207ல் 3.57 ஏக்கர் என மொத்தம் 21.46 ஏக்கர் பரப்பளவுள்ள நன்செய் நிலங்கள், குறுவட்ட நில அளவையர் மற்றும் பொன்மேனி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரால் 11.03.2022 அன்று அளவீடு செய்து காட்டப்பட்டன.

21.46 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் மதுரை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், இந்துசமய அறநிலையத்துறையின் மதுரை (தெற்கு) பிரிவு ஆய்வர், வருவாய்த்துறையினர் முன்னிலையில் மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் துணை ஆணையர்/செயல் அலுவலரால், திருக்கோயில் சொத்து என அறிவிப்புப்பலகை ஊன்றப்பட்டு நேற்று திருக்கோயில் வசம் அடையாள சுவாதீனம் (Token possession) எடுக்கப்பட்டது. அவ்வாறு சுவாதீனம் எடுக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.21.46 கோடியாகும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் அறிவிப்புப் பலகை

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயில் சார்பாக ரூ.23 கோடியில் தங்கும் விடுதி - ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.