ETV Bharat / city

காலி பணியிடங்களை உடனடியாக ஒரு நாளில் நிரப்ப முடியாது அமைச்சர் முத்துசாமி - dam

வீட்டு வசதித் துறையில் 35 சதவீதம் காலிப்பணியிடம் உள்ளது காலி பணியிடங்களை உடனடியாக ஒரு நாளில் நிரப்ப முடியாது என வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி பவானிசாகரில் தெரிவித்துள்ளார்

காலி பணியிடங்களை உடனடியாக ஒரு நாளில் நிரப்ப முடியாது அமைச்சர் முத்துசாமி

author img

By

Published : Aug 12, 2022, 9:59 PM IST

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி பவானிசாகர் கலந்துகொண்டு அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

”முதலமைச்சர் உத்தரவின் பேரில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனப்பகுதிகளில் விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் மற்றும் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் முத்துசாமி பேட்டி

கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது குறித்து கருத்து வேறுபாடு உள்ள இருதரப்பு விவசாயிகளும் சுமூகமாக பேசி முடிவெடுக்க வேண்டும்.

வீட்டு வசதி துறையில் காலி பணியிடங்களை உடனடியாக ஒரு நாளில் நிரப்ப முடியாது. 35 சதவீதத்துக்கு மேல் காலி பணியிடங்கள் உள்ளதால் வேலைப்பளு அதிகரித்துள்ளது. பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு வேளாண்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் தூயமல்லி என்ற புதிய ரக நெல் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று மெட்ரிக் டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தெங்குமரஹாடா வன கிராம மக்களை மறுகுடியமர்த்துவது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் ஈரோடு கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்”, என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு நடத்த திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.