ETV Bharat / city

அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

பழையபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

d
அதிவேகமாகவந்த கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு
author img

By

Published : Aug 2, 2021, 10:47 PM IST

Updated : Aug 2, 2021, 11:00 PM IST

ஈரோடு: காசிபாளையத்தைச் சேர்ந்த சாயத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளி குப்புசாமி. இவரும், இவரது நண்பர் செல்வராஜும் இருவரும் இருசக்கர வாகனத்தில் பழையபாளையத்தில் சாலையைக் கடக்க முயற்சித்துள்ளனர்.

கார் ஓட்டுநரின் அஜாக்கிரதையால்...

அப்போது, பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி அதிவேகமாகவந்த கார், இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் குப்புசாமி, செல்வராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு

சம்பவம் தொடர்பாக ஈரோடு தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிவந்த சென்னிமலையைச் சேர்ந்த ஜெயபிரகாஷை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஆக .02) இருசக்கர வாகனம் சாலையைக் கடக்க முயற்சித்தபோது, அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: 'முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் கொலை - மேலும் இருவர் கைது'

Last Updated : Aug 2, 2021, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.