ETV Bharat / city

நாட்டு துப்பாக்கி பதுக்கிய 2 பேர் கைது! - நாட்டு துப்பாக்கி

அந்தியூர் அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து துப்பாக்கி எங்கிருந்து வாங்கப்பட்டது போன்ற விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு செய்திகள்
ஈரோடு செய்திகள்
author img

By

Published : Sep 25, 2021, 10:55 PM IST

ஈரோடு: அந்தியூர் அருகேயுள்ள கிணத்தடி விலாங்குட்டை பகுதியில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல் துறையினர் விளாங்குட்டை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெருமாள், மதன் ஆகியோர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள புதரில் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக துப்பாக்கியைப் பறிமுதல் செய்து மதன், பெருமாள் ஆகிய இருவரையும் தனிப்படை காவல் துறையினர் அந்தியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: 'பயங்கரவாதத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் நாடுகளை எதிர்க்க வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.