ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் மேட்டுப்பாளையத்தில் மினியப்பன் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர் வீட்டுக்கு கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஆலப்பாளையம் நொச்சிகுட்டையை சேர்ந்தராம்குமார், பூங்கொடி தம்பதியரின் மகள் திலகவதி கிருஷ்ணசாமி, செல்வி தம்பதியரின் மகன் அஸ்வின் ஆகியோர் சென்றுள்ளனர்.
அஸ்வின் புளியம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பும், திலகவதி 12 ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் அஸ்வின் மற்றும் திலகவதி அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் சேர்ந்து, குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கே அஸ்வின் குளிப்பதற்காக குட்டைக்குள் இறங்கி உள்ளான்.
அப்போது எதிர்பாராதவிதமாக குட்டையில் இருந்த தண்ணீரில் அஸ்வின் மூழ்கவே, அவனது அலறல் சத்தம் கேட்டு அவனை காப்பாற்ற திலகவதி குட்டைக்குள் இறங்கி உள்ளார். ஆனால் ஆழம் அதிகமான பகுதியாக இருந்ததால், இருவரும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். அதை பார்த்த மற்ற சிறுவர்கள் அலறியடித்து ஓடி இதுகுறித்து மற்றவர்களிடம் கூறி உள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று குட்டையில் மூழ்கிய திலகவதி மற்றும் அஸ்வினை மீட்டு சிகிச்சைக்காக நம்பியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தார். கோயில் திருவிழாவிற்கு வந்த அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் ; கைதான 5 பேர் ஜாமீன் கோரி மனு!