ETV Bharat / city

பட்டப்பகலில் வீடு புகுந்து மிதிவண்டி திருடிய கொள்ளையன் - வைரலாகிய சிசிடிவி காட்சி! - பட்டப்பகலில் வீடு புகுந்து சைக்கிள் திருட்டு

ஈரோடு: சத்தியமங்கலத்தில் பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து மிதிவண்டியைத் திருடி செல்லும் கொள்ளையன். புகார் செய்தும் காவல் துறையினர் கண்டுகொள்ளாததால் கண்காணிப்பு கேமரா பதிவுகளை சமூக வலைதளங்களில் அதன் உரிமையாளர் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது

சிசிடிவி காட்சி
author img

By

Published : Aug 26, 2019, 6:19 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து சைக்கிளை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் தனது வீட்டின் முன்புறத்தில் தனது கார், இருசக்கர வாகனம், குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி காலை அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சிறுவர்கள் பயன்படுத்தும் சைக்கிள் காணாமல் போனது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த யுவராஜ் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்த போது காலை 9.30 மணியளவில் தனது வீட்டின் முன்புற நுழைவுவாயிலைத் திறந்து கொண்டு, ஒரு நபர் உள்ளே நுழைந்து மிதிவண்டியை எடுத்துக்கொண்டு செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீடு புகுந்து மிதிவண்டி திருடும் திருடன், கண்காணிப்பு கேமராவில் பதிவான போது...

இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால் புகாரை காவல் துறையினர் பெரிதாக கண்டுகொள்ளாததால் இந்த சிசிடிவி காட்சியை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவு செய்து, இந்த திருட்டுப் பற்றி தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு அவரது தொலைபேசி எண்னை பரிமாறியுள்ளார். இந்த வாட்ஸ்அப் சிசிடிவி காட்சி அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையன் மிதிவண்டியைத் திருடி செல்லும் காட்சி அப்பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:tn_erd_04_sathy_cycle_theft_cctv_vis_tn10009

சத்தியமங்கலம் நகர் பகுதியில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து சைக்கிளை திருடி செல்லும் கொள்ளையன்.

போலீசில் புகார் செய்து போலீசார் கண்டுகொள்ளாததால் சிசிடிவி கேமரா பதிவுகளை வாட்ஸ் குரூப்பில் பதிவு செய்த உரிமையாளர்

சத்தியமங்கலம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து சைக்கிளை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதியில் கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். வியாபாரம் செய்து வரும் இவர் தனது வீட்டின் முன்புறத்தில் தனது கார், இருசக்கர வாகனம், குழந்தைகள் பயன்படுத்தும் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி காலை அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சிறுவர்கள் பயன்படுத்தும் சைக்கிள் காணாமல் போனது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த யுவராஜ் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது காலை 9.30 மணி அளவில் தனது வீட்டின் முன்புற கேட்டைத் திறந்து கொண்டு ஒரு நபர் உள்ளே நுழைந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு மீண்டும் கேட்டை இருந்தபடி சாத்திவிட்டு திருடிச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் போலீசார் புகாரை பெரிதாக கண்டுகொள்ளாததால் இந்த சிசிடிவி காட்சியை வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவு செய்து இந்த திருட்டு பற்றி தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு அவரது செல்நெம்பரை தெரிவித்துள்ளார். இந்த வாட்ஸ் ஆப் சிசிடிவி காட்சி அனைத்து வாட்ஸ் ஆப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையன் சைக்கிள் திருடி செல்லும் செல்லும் காட்சி அப்பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.